Connect with us

#24 Exclusive

breaking இந்தியாவின் அதிரடியை தொடர்ந்து நாடுகடத்தப்படுகிறார் சாஹிர் நாயக் தமிழகத்தை சேர்ந்த…

Published

on

டெல்லி.,

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வழக்கில் மலேசியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயிக்கை நாட்டில் இருந்து வெளியேற மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முயற்சி இருந்தாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். சாஹிர் நாயிக் இந்தியாவில் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை மீண்டும் மலேசிய அரசிடம் இந்தியா வழங்கியது.

மேலும் சாகிர் நாயிக்கை வெளியேற்றவில்லை என்றால் இந்தியாவின் நட்புநாடு அந்தஸ்த்தை மலேசியா இழக்கும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியது அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவில் இருந்து ஜாகிர் நாயிக் வெளியேற்றப்பட இருக்கிறார். தொடர்ந்து இந்திய அரசு சாஹிர் நாயக்கை மீண்டும் இந்தியா கொண்டுவருவதற்கு காரணமாக பார்க்கப்படுவது.,

தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கும், சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை விதைக்க பெரும் நிதி உதவியினை அளித்து வந்துள்ளார். சாஹிர் இந்தியாவிற்கு தூக்கி வரும் போது தமிழகத்தில் அவரிடம் நிதி உதவி பெற்ற பல அமைப்புகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரின் பட்டியலும் வெளிவரும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவேதான் சாஹிர் நாயிக்கை கைது செய்ய இந்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது, எனவே சாஹிர் இந்தியா அழைத்து வரும்போது தமிழகத்தை சேர்ந்த பல திரை பிரபலங்கள் தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் சிக்குவது உறுதி !

சாஹிரின் குடியுரிமை கோரிக்கையை துபாய் மற்றும் சவூதி நாடுகள் இந்தியாவை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share