Connect with us

#24 Exclusive

Breaking: மூண்டதா 3ஆம் உலகப்போர் ? டிரம்ப் அதிரடி ! ஈரான் அவசர நிலை பிரகடனம் ! வீடியோ இணைப்பு.

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் அமேரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் தான். கடந்த வருடத்தில் இருந்தே இந்த பதற்றம் நிலவி வந்தாலும் டிசம்பர் கடைசி வாரத்தில் உச்சத்தை அடைந்தது. இதற்கு காரணம் ஈராக்கின் பக்தாத்தில் அமேரிக்க தூதரகத்தை ஈரான்னின் ஆதரவு படை தாக்குதல் நடத்தியது. இதனால் புத்தாண்டு வாழ்த்துடன் எச்சரிக்கையையும் சேர்த்து கூறினார் அமேரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர் எச்சரிக்கை விடுத்த 48 மணி நேரத்தில் ஈரான் படை தளபதி சொலைமாணியை அமேரிக்கா விமானப் படை தாக்குதலில் கொன்றது. தற்போது ஈரான் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. முப்படைகளையும் தயார் நிலையில் நிலை நிறுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.

ஈரான்னின் படை தளபதி சொலைமாணியை கொன்றது தற்காப்பிற்கே என்று அமேரிக்கா கூறியுள்ளது. அவர் அமேரிக்கா அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக அமேரிக்கா கூறுகிறது. ஈரான் மக்களிடையேயும் அரசிடமும் பெரும் ஆதரவை பெற்றிருந்தவர் சொலைமாணி. இவர் டெல்லி லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு காரணமானவர் என்று அமேரிக்கா கூறுகிறது.

ஈரான் படை தளபதி சொலைமாணியை அமேரிக்கா கொன்றதன் விளைவாக ஈரான் ஆதரவு படையினர் ஈராக்கில் இருக்கும் அமேரிக்கா தூதரகங்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. மேலும் ஞாயிறு மாலையில் இருந்து தாக்குதல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. மேலும் நேற்று மாலை ஈரான்னில் உள்ள பழம்பெரு ஜம்காரான் மசூதியில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டது. இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்திறாதவொன்று. இது போர் மற்றும் தியாகத்தை குறிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது. இதனால் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.

Loading...

இந்த பதற்றம் தெளிவதற்குள் நேற்று நள்ளிரவு திடீரென ஈராக்கின் பக்தாத்தில் உள்ள அமேரிக்கா தூதரகத்திலும் விமான படை தளத்திலும் தாக்குதல் நடந்தது. இதனிடையே அமேரிக்காவின் 3500 படை வீரர்களை லெபனான் நாடு அருகே வந்திறங்கியுள்ளனர். மேலும் 150 போர் விமானங்களை அமேரிக்கா முதற்கட்டமாக அனுப்பியுள்ளது.

Loading...

ஐரோப்பாவில் இருந்த அமேரிக்கா படைகளையும் உடனடியாக ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலும் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அமேரிக்கா நட்பு நாடுகளான NATO நாடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிபியா, துருக்கி, லெபனான், சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சௌதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

அமேரிக்கா ஈரான் இடையேயான போர் பதற்றம் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபக்கம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்றாலும் மறுபக்கம் மூன்றாம் உலகப்போர் மூலும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இது அமேரிக்கா ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நிற்காமல் ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மன், ஜப்பான், வடகொரியா என போர் பதற்றம் பரவும். இது பாகிஸ்தான்- இந்தியா என்று உருவெடுத்தால் நமது நாட்டிலும் பதற்றம் உச்சத்தை எட்டும்.

அமேரிக்கா- ஈரான் போர் மூன்றாம் உலகப்போராகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் இந்தியா யார் பக்கம் நிற்க்கும் அல்லது நடுநிலை வகிக்குமா என்று தற்போது தெளிவாக கூற முடியாது. காரணம் இரு நாடுகளும் நமக்கு நண்பர்களே.இரு நாடுடனும் வர்த்தக உறவு உள்ளது. இரு நாட்டிலும் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த போர் பதற்றம் நமது நாட்டிற்கு பெட்ரோல் விலை உயர்வு மட்டுமல்ல இரண்டு நண்பர்களிடையே சிக்கிதவிக்கும் தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது.

போர் பதற்றம் தணிந்து அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending