Connect with us

#24 Exclusive

BREAKING உலகின் அதிபயங்கர ஆயுதம் இந்திய படையில் இணைகிறது இனி நம்ம ராஜ்யம்தான் !

Published

on

காலம் காலமாக கடற்படைகள் இந்த உலகில் இருந்து வந்தாலும் , 20ஆம் நூற்றாண்டில் கடல்சார் போர்முறையில் அபரிதமான மாற்றம் ஏற்பட்டது. இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்கள் ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட காலம், அவை இரண்டு உலகப்போர்களிலும் அளவில்லாமல் பயன்படுத்தப்பட்டன.
உதாரணமாக இயந்திர திறனால் இயங்கும் கப்பல்கள்,விமானங்கள், இயந்திர துப்பாக்கிகள், டாங்கிகள், அணு ஆயுதங்கள் என நவீன போர்முறையின் அடித்தளம் கடந்த நூற்றாண்டாகும்.
இப்படி முக்கியமான ஆயுதங்களில் நீர்மூழ்கி கப்பல்கள் தவிர்க்க முடியாத இடம் பிடிக்கின்றன, இரண்டாம் உலகப்போர் காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஹிட்லரின் நீர்மூழ்கி கப்பல்கள் ஆங்கிலேய கடற்படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கின கிட்டதட்ட இங்கிலாந்து நால்புறமும் முற்றுகையிடப்பட்டு வெளி உலகுடன் தொடர்பில்லாத நிலையில் இருந்து.பசிபிஃக் பெருங்கடலிலும் நீர்மூழ்கிகள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போரில் நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கம் நிரந்தரமானது, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் போருக்கு பின்னர் இன்னும் நவீன நீர்மூழ்கி கப்பல்களை கட்டின.

அதன் பின்னர் பனிப்போர் காலத்தில் நீர்மூழ்கி கப்பல்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. அன்றைய உலகில் அசைக்க முடியாத சக்திகளாக திகழ்ந்த சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா எனும் இருபெரும் துருவங்கள் தங்கள் கடற்படைகளில் நீர்மூழ்கிகளை அதிகளவில் சேர்த்து இருநாட்டு கடல்பகுதிகளுக்குள் அனுப்பி உளவு பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டன. ஏன், ஒருமுறை சோவியத் நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா மீது தனது அணு ஆயுதங்களை வீசும் நிலை வரை சென்றது பின்னர் பிரச்சினை இல்லாமல் ஓய்ந்தது.
காலம் செல்ல செல்ல அதிக ஆழம் செல்லக்கூடிய,அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும் எல்லையற்ற திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் பயன்பாட்டில் வந்து உலகை மிரட்ட தொடங்கின.
நீர்மூழ்கி கப்பல்களுக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட காரணம் இவை நீருக்கடியில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை ஒளிந்திருக்கும் தன்மை கொண்டவை மேலும் இவை பதுங்கி இருக்கும்போது அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. உன் ஏரியாவில் வந்து உன்னையே போட்டுதள்ளுவேன் என்று படங்களில் ஹீரோக்கள் பேசும் வசனம் பார்த்திருப்பீர்கள், நீர்மூழ்கி கப்பல்கள் அந்த ரகம் தான் அதாவது எதிரிக்கு மிக அருகில் அவர்களுக்கே தெரியாமல் சென்று தாக்கும் திறன் கொண்டவை.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் வேட்டை மற்றும் தாக்குதல் , அணு ஆயுதம் தாங்கி செல்லும் வகை என இரண்டு வகைப்படும். இவற்றில் தாக்குதல் நீர்மூழ்கிகள் எதிரி கப்பல்களை, இலக்குகளை தங்களது ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகள் முலம் தாக்கும் அதே சமயத்தில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டவை காரணம் எதிரி நாடுகளுக்கு அருகில் சென்று கடலடியில் பதுங்கி இருந்து தங்களது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எளிதில் கண்டுபிடிக்கப்படும் ஆனால் கடலடியில் இருப்பது வெளியே தெரியாது.
இன்றைய உலகில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்சு, சீனா,இந்தியா மற்றும் பிரெஸில் ஆகிய நாடுகள் அணுசக்தியால் இயங்கும் நவீன நீர்மூழ்கி கப்பல்களை சொந்தமாக கட்டும் திறன் பெற்ற நாடுகளாகும்.
இதில் பிரெஸில் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிகளை மட்டுமே கட்டும் திறன் பெற்றிருக்க மற்ற 6 நாடுகளும் இரு வகை கப்பல்களையும் கட்டும் திறன் பெற்றுள்ளன.
தற்போது இந்திய கடற்படை தனது பலத்தை பெருக்கும் வகையில் அணுசக்தி திறன் கொண்ட இரு கப்பல்களையும் அதிகளவில் கட்ட முடிவு செய்துள்ளது.இதன் ஆரம்ப கட்டமாக அரிஹந்த் எனும் கப்பல் 2014ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு படையில் இணைக்கப்பட்டது.

Loading...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ என் எஸ் அரிஹந்த் தனது முதல் வியூக முக்கியத்துவம் வாயந்த ரோந்தை முடித்து கொண்டு வந்தது. தற்போது இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக கட்டி வரும் இரண்டாவது அரிகந்த் வகை அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் அரிகத் தனது அனைத்து சோதனைகளையும் முடித்துள்ளதாகவும், ஐ என் எஸ் அரிகத் இந்த வருட இறுதி அல்லது 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் படையில் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐ என் எஸ் அரிகத் 2020ல் ஏதேனும் ஒரு மாதத்தில் படையில் அரிகத் இணைக்கப்படும்.இந்த மொத்த அரிகந்த் ரக நீர்மூழ்கிகள் கட்டும் திட்டம் அதிரகசியமாகவே உள்ளது.அரிகந்த இரகசியமாக படையில் இணைக்கப்பட்டு தற்போது இரண்டாம் கப்பலும் அதிரகசியமாக கட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டு அடுத்த வருடம் இரகசியமாகவே படையில் இணைய வாய்ப்புள்ளது. 2017ஆம் ஆண்டு கடற்சோதனைகளுக்காக அரிகத் நீருக்குள் ஏவப்பட்டு தற்போது சோதனைகளை முடித்துள்ளது.

Loading...

INS Arighat அரிகந்தை போலவே 6000 டன்கள் எடை கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டாலும் ஆனால் அது அரிகந்தை விட பெரியதாகவும் அரிகந்தை விட அதிக பலிஸ்டிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது. அதாவது அதிக நீளம் மற்றும் அகலம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அரிகத் தவிர S4 & S4* எனப்படும் மேலும் இரு நீர்மூழ்கிகள் கட்டப்பட்டுவருகிறது. தற்போது உள்ள நீர்மூழ்கியை விட 1000+ அதிக எடையுடன் இந்த நீர்மூழ்கிகள் கட்டப்படும். இவை அனைத்துமே கே ரக அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும்.
இது இந்தியாவின் சக்தியை பன்மடங்கு அதிகரித்து உலக அரங்கில் இந்தியாவின் மீதிருக்கும் மதிப்பை நிச்சயமாக உயர்த்தும். மேலும் இது எந்த அணுசக்தி பலம் கொண்ட நாடும் நம் நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற யோசனை கூட வராத வண்ணம் அளவில்லா பலத்தை தரும் என்பது மிகையாகாது. இனி இந்திய கடற்பரப்பில் நுழையவேண்டும் என்ற எண்ணம் கூட எதிரி நாடுகளுக்கு தோன்றாது என்றே கூறலாம்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending