ஏற்கனவே கட்சி சின்னம் காலி இப்போது கட்சியும் காலியாகுமா? உள்துறை அமைச்சகத்தில் பரபரப்பு முறையீடு

நாளுக்கு நாள் சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் அத்துமீறி செயல்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக அரசிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன ஆனால் காவல்துறை சார்பில் எந்த வித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Loading...

இந்நிலையில் சென்னை மண்ணிவாக்கம் என்ற பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கும் வகையில் சென்றுள்ளது, மண்ணிவாக்கத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவர் வினோத், இவரிடம் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலம்பரசன் என்ற நபர் மிரட்டல் விடுத்த ஆடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளன.

மெடிக்கல் ஓனர் வினோத்தை தொடர்பு கொண்ட சிலம்பரசன் நீ என் பகுதியில் கடை நடத்த வேண்டும் என்றால் 50 ஆயிரம் காசு கொடுக்கவேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் உன்னை கடை நடத்த விடமாட்டேன் என்றும் கடையை உடைப்பதுடன் உன்னையும் வெட்டுவேன் என பேசியுள்ளார், இவர் மீது பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Loading...

இந்நிலையில் மருந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து போராட்டத்தில் இறங்கின, அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளிக்க ரவுடி சிலம்பரசன் தலைமறைவாகிவிட்டான், இந்நிலையில் தொடர்ந்து வினோத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கவே தற்போது வினோத்திற்கு ஆதரவாக நாடார் சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.

அத்துடன் வினோத் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால் அது சாதி கலவரமாக வெடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் மீது அதே கட்சியை சார்ந்த ரெட்டைமலை சீனிவாசன் பேத்தியிடம் பண மோசடி செய்தது, மாமூல் கேட்டது, கட்டப்பஞ்சாயத்து என 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும்..,

ஆவணமாக தயாரித்து 7 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அத்துடன் தேர்தல் ஆணையத்திற்கும் இந்த குழு தகவலை திரட்டி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது, இந்தியாவிலேயே ஒரு கட்சி மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யபட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீதுதான் வழக்குகள் அதிகம் எனவும் கூறப்படுகின்றன.

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகளுக்கு தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில் இப்போது அவர்களின் கட்சி அங்கீகாரத்தை தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது, மேலும் ரெட்டைமலை சீனிவாசன் மிக பெரிய பட்டியல் சமுதாய தலைவராக பார்க்கப்பட்டவர் என்ற நிலையில் அவரது வாரிசிடம் பண மோசடி செய்தது அதே சமூகத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துவரும் சூழலில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடியாக உள்துறை அமைச்சகம் களத்தில் இறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, இதனை அறிந்த திருமாவளவன் தற்போது ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தொடர்பு கொண்டு அமைதியாக இருக்க அறிவுறுத்தி வருகிறாராம்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*