Connect with us

#24 Exclusive

#BREAKING வருகிற நவம்.18 கூடுகிறது நாடாளுமன்றம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றுகிறது மோடி அரசு !

Published

on

டெல்லி.,

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 17ம் தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடைபெற்றது. அப்போது முத்தலாக் தடை மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உட்பட 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 18ம் தேதி துவங்கி டிசம்பர் 24ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

இக்கூட்டத்தில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான அனைத்து கோப்புகள், சட்ட முனைவரைவுகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் உட்பட அனைத்தும் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இனி மதத்திற்கு ஒரு சட்டம் என்பதை தவிர்த்து இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே சட்டம்., என்ற நிலையை 2020 ஆண்டுக்குள் கொண்டுவர பிரதமர் மோடி முடிவெடுத்திருப்பதாகவும்..,

தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராமர் கோவில் வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரை மாற்றி அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அனைவருக்கும் ஒரே சட்டம் நிறைவேற்ற பட்டால் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 12% வழக்குகளுக்கு தீர்வுகாணப்படும் என்றும், நாட்டில் மதத்திற்கு ஒருசட்டம் என்பது இருக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

©TNNEWS24

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share