Connect with us

#24 Exclusive

BREAKING முரசொலி நிலவிவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஸ்டாலினுக்கு முக்கிய உத்தரவு ! மீண்டும் சூடு பிடித்தது

டெல்லி :- முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைத்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலினின் அசுரன் திரைப்பட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார், அதன்பிறகு பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் டெல்லி சென்று தேசிய பட்டியலின ஆணையத்தில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாகவும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடியாக புகார் ஒன்றிணை அளித்தார்.

அதனை தொடர்ந்து பட்டியலின ஆணையம் துணை தலைவர் முருகன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து சென்னையில் கடந்த நவம்பர் 19-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கியது, இதில் பஞ்சமி நிலம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று திமுக ஆணையத்திடம் தெரிவித்து இருந்தது, மேலும், ராமதாஸ் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடங்க போவதாகவும் திமுக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது இந்த சூழலில்தான்.,

இன்று தேசிய தாழ்த்த பட்டோர் ஆணையம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிரடி உத்தரவு ஒன்றிணை பிறப்பித்துள்ளது அதன் படி ஸ்டாலின் வருகிற 07.01.2020 அன்று டெல்லியில் முரசொலி நிலம் தொடர்பான விசாரணையில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திமுக ஆணையத்திற்கு வழக்கினை விசாரிக்க உரிமையே இல்லை என்று கூறி வந்த நிலையில் ஆணையத்தின் உத்தரவு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் இடைத்தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் முரசொலி பஞ்சமி நிலவிவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த நோட்டிஸினை ஆணையம் ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்டாலின் தரப்பிற்கு அனுப்பிவைத்துள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending