#breaking ரஜினி கட்சியின் பெயர் வெளியானது ! ரசிகர்கள் கொண்டாட்டம் திட்டமிட்டு கசியவிடப்பட்டதா?

சென்னை.,

Loading...

அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற கேள்விக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி, அதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகளை நியமித்து களத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இயங்கினார்.

மேலும் அமைதியான முறையில் கிராமங்கள் வரை தனது ரசிகர்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ந்து வந்தார் ரஜினி, இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஏறக்குறைய ஒரு வருடத்தை கடந்துவிட்டதால் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியை ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் மீண்டும் எழுப்ப தொடங்கினர் . சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் கூட ரஜினியின் கட்சி அறிவிப்பை கிண்டல் செய்து காட்சி அமைத்திருந்தனர்.

Loading...

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது, கடந்த 5 ஆண்டுகளாக ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் சரியாக கணித்து சொல்லிவரும் ( திரைப்படங்கள் அரசியல் )சந்தோஷ்குமார் இந்த தகவலை நேற்று இரவு இணையத்தில் கசியவிட்டுள்ளார், இவர்தான் ரஜினி நயன்தாரா இருவரும் நடித்துவரும் புகைப்படங்களை இணையத்தில் முதலில் வெளியிட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதில் காவலர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி தலைவரின் அரசியலை ஒட்டுமொத்த இந்தியாவே நம்மைவிட அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் தற்போது உங்களுக்கு ஒரு தகவலை சொல்லிவிட்டு செல்ல வந்திருக்கிறேன் அதுதான் நமது தலைவரின் அரசியல் அவதாரம். நமது கட்சியின் பெயர் #தேசிய தமிழர் முன்னேற்ற கழகம்
இதுகுறித்து விரைவில் அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த தகவல் ரஜினி ரசிகர்கள் இடையே பரவியதை தொடர்ந்து பலரும் இதுகுறித்து கருத்துக்களை பதிவிட்டு வருவது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது, குறிப்பாக புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தங்களுக்கு இரண்டு பெயர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் இதுபோல் ஒரு பெயரை கசியவிட்டு வெள்ளோட்டம் பார்ப்பார்கள், அது அவர்களது ஆதரவாளர்களுக்கு பிடித்துவிட்டால் அதையே பரிசீலனை செய்து இறுதி செய்துவிடுவார்கள்.

இல்லை என்றால் மாற்றி விடுவார்கள் என்னை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவராக ரஜினி வர வாய்ப்பு இருப்பதாக முன்னணி ஊடங்கள் அவரது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தான் அதுபோன்ற எந்த முடிவிலும் இல்லை என்பதனை ரஜினி கட்சி பெயரை கசியவிட்டதன் மூலம் உறுதி படுத்திவிட்டார் என்று அரசியல் விமர்ச்சகர் ரவீந்திரன் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியில் தமிழர் பெயரை சேர்ந்து நேரடியாக தன்னை விமர்சனம் செய்த நாம் தமிழர் போன்ற இயக்கங்களுக்கும் பதிலடி கொடுக்கும் யுத்தியை ரஜினி மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த தகவல் வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். மேலும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வராத நிலையில் இதுதான் கட்சியின் பெயராக இருக்குமா இல்லை வேறு ஏதேனும் காரணங்களுக்காக கசியவிடப்பட்டதா என்ற சந்தேகமும் ரஜினி ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது.

எது எப்படியோ தேசிய தமிழர் முன்னேற்ற கழகம் பெயர் எப்படி இருக்கிறது?

Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*