#BREAKING போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை ₹16000000000 சொத்துக்கள் பறிமுதல் !

சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான 1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் அதிரடியாக ஆய்வு நடத்தி பல்வேறு முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி சென்றனர்.

Loading...

அப்போதைய வருமானவரித்துறை ஆய்வின் போது சசிகலா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், தினகரன் உள்ளிட்டவர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த முறை போயஸ் கார்டனில் கைப்பற்ற பட்ட சொத்துக்கள் குறித்த அதிரடியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் 1600 கோடி மதிப்பில் உலகம் முழுவதும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும், அது குறித்த முழுமையான ஆதாரங்கள் போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு கிடைத்ததாகவும் தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

மேலும் கைப்பற்ற பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 1600 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை முடிவெடுத்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் எப்படி வந்தது என்று இனி விசாரணை நடைபெற இருப்பதால் இது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2666 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*