#BREAKING: பிரதமரின் திடீர் லடாக் பயணம். மாலையில் அவசரமாக கூட்டப்படும் CCS கூட்டம் ! பின் இருக்கும் ராஜதந்திர நடவடிக்கைகள் ! முழு தகவல்கள்.

லடாக்கின் சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திடீர் பயணமாக லடாக்கின் நிமு ராணுவ தளத்திற்கு சென்று நமது ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவருடன் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் நரவாணே உடன் சென்றனர்.

Loading...

இந்த திடீர் பயணம் ஒருபுறம் இருக்க இந்த எல்லை பதற்றம் தொடங்கிய முதலே பல்வேறு ராஜதந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகள் பின்புறம் நடந்துள்ளது.

1) Logistics Pact – ராணுவ தளவாட பயன்பாடு:
கடன் மாதம் ஆஸ்திரேலியாவுடன் Logistics Pact – ராணுவ தளவாட பயண்பாட்டு ஒப்பந்தத்தை பிரதமர் மோடி அவர்கள் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸ்சன் உடன் கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்திய – பசிபிக் பெருங்கடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரு நாட்டு ராணுவ தளங்களை, விமானப்படை தளங்களை பயண்படுத்தி கொள்ளலாம். இது நேரடியாக சீனாவை குறிவைத்து போடப்பட்ட ஒப்பந்தம்.

Loading...

2) சக்ர வியூகம்:
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஆசிய நாடுகளின் பிரதமர்கள் அல்லது அதிபர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். உதாரணமாக லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான், வியட்நாம், மியான்மார், பூடான், தென் கொரியா, ரஷ்யா, மங்கோலியா, மற்றும் ஆஸ்திரேலியா. இது அனைத்தும் கொரோணா-வை பற்றிய பேச்சுவார்த்தை என்று கூறினாலும் பின்னுருக்கும் ராஜதந்திரம் அனைவரும் அறிந்ததே. ஏனெனில் இந்த நாடுகள் அனைத்தும் சீனாவை சுற்றி இருக்கும் நாடுகள். சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள்.

3) Defence Urgent Procurement:
இதன் மூலம் அவசரமாக ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், பீரங்கிகள், போர் விமானங்கள் வாங்க முடியும். இதன் மூலம் 21 MiG-29 களும், 12 Su-30 MKI ரக போர் விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்க பட உள்ளது. கள பீரங்கிகள் (Artillery) களுக்கான M777 ரக Shell கள் அமேரிக்காவிடம் இருந்து ஒரே வாரத்தில் வரவழைக்கப்பட்டது. இஸ்ரேலிடம் இருந்து பராக் Barak ரக வான் பாதுகாப்பு கருவிகள் (Air Defence Systems) வரவழைக்கப்பட்டது. இது இஸ்ரேல் ராணுவத்தில் பயன்பாட்டில் இருப்பதாகும். இது அவசரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4) Mind Games:
பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மான் கீ பாத்தில் உரையாற்றிய பின்னர் மீண்டும் புதன் கிழமை மாலை 4 மணிக்கு உரையாற்றினர். அவர் கொரோணாவின் தாக்கம் மற்றும் இலவச ரேஷன் (PMGKY) நவம்பர் மாதம் வரை நீடிப்பு பற்றி பேசினாலும். இதில் ஒரு செய்கை உள்ளது. அதில் ஒன்று அவர் 4 மணிக்கு உரையாற்றியது. அதன் மூலம் அவரின் பேச்சை இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதும் கேட்டனர். முக்கியமாக சீனர்கள் முழித்து இருக்கும் நேரம் அது. 8 மணிக்கு உரையாற்றினால் அவர்கள் உறங்கியிருக்க கூடும். இது ஒன்று, இன்னொன்று என்னவென்றால் போர் யுக்தியின் முக்கிய அம்சமாக நமது அர்த்த சாஸ்தரத்தில் சாணக்கியர் கூறுவதும், சீனர்களின் சுன்சூ Tsun Tsu போர் யுக்தியாக கூறுவதும் ஒன்றே. போர் என்று வந்தால் முதலில் “உணவு தானியங்கள், நீர்” போன்ற அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வது தான். இதன் படியே பிரதமர் மோடியும் நவம்பர் மாதம் வரை ரேஷன் இலவசம் என அறிவித்தார். இது இரண்டும் மனரீதியாக சீனாவை உலுக்கி உள்ளது.

5) ராஜதந்திரம் – Diplomacy:
நாம் முன்னரே கூறியது போல் சீனாவை சுற்றியுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி. வியாழன் அன்று பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் -க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்ய போர் வெற்றி 70ஆம் ஆண்டு மற்றும் அரசியல் சாசன திருத்தம் படி புடின் 2036 வரை அதிபராக தேர்வு செய்யப்பட்டதிற்கு வாழ்த்து கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை இதோட நின்றிருக்காது. சீனாவை பற்றி பேசியதாக தகவல்கள் வருகிறது. இது ஒருபுறம் இருக்க நேற்று திடீரென அமேரிக்காவுக்கான இந்திய தூதர் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் US Secretary of State Mike Pompeo -வை சந்தித்து பேசினார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் தற்போதைய பிரதமர் மோடியின் லடாக் பயணத்திற்கு மறைமுக தொடர்பு உள்ளது.

இந்த ராணுவ மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பிரதமரின் திடீர் லடாக் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லி திரும்பியவுடன் CCS – Cabinet Committee on Security, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவசரமாக நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படை தளபதிகள், R&AW தலைவர், IB தலைவர், DRDO மற்றும் ISRO உயர் அதிகாரிகள் பங்கு பெறுவர். இதேபோல் புல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த பாலாகோட் வான் தாக்குதலுக்கு முன் நடைப்பெற்றது CCS meeting என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*