#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் !

டெல்லி :-இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது அவருக்கு பெரும் சுமையாக வந்துவிட்டது, இவ்வளவு பூதாகரமாக இந்த விவகாரம் வெடிக்கும் என்று ஸ்டாலின் நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

Loading...

ஸ்டாலின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்திருப்பதே பஞ்சமி நிலம்தான் என சொல்ல கருத்து மோதல் சூடு பிடித்தது, முரசொலி இடம் பஞ்சமி நிலம்தான் என நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவதாக கூறிய ஸ்டாலின், அப்படி நிரூபிக்க முடியவில்லை எனில் ராமதாசும், அன்புமணியும் அரசியலில் இருந்து விலகுவார்களா? என்று சவால் விட்டதுடன் முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களையும் பகிர்ந்திருந்தார்.

அதன் பிறகு விவகாரம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியது எங்கு அடித்தால் வேலை செய்யுமோ அங்கு சரியா அடித்து காய் நகர்த்தியிருக்கிறார், பாஜக மாநில செயலாளர் Prof ஸ்ரீனிவாசன், டெல்லியில் உள்ள SC, ST ஆணையதிடம் நேரடியாக சென்று முரசொலி நிலம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அதிரடியாக யாரும் எதிர்பாராத விதமாக புகார் மனுவினை அளித்தார்.

Loading...

அதற்கு உடனடியாக தமிழக தலைமை செயலாளர் முரசொலி குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, ஆனால் இதுவரை தலைமை செயலாளர் சண்முகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை, இதனால் அதிருப்தி அடைந்த ஆணையம் தமிழக அரசின் செயலாளர் நேரடியாக ஆஜர் ஆகவேண்டும் என்ற உத்தரவினை மீண்டும் அதிரடியாக பிறப்பித்துள்ளது.

இதனால் தற்போது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் எனவும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பஞ்சமி நில விவகாரம் புயலை கிளப்பும் என்றும், ஒரு வேலை புகார் உறுதி செய்யப்பட்டால் எப்போதும் திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் தலித் சமுதாய மக்கள் இடையே அது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சரியான நேரத்தில் புகார் மனுவினை அளித்துள்ள பாஜகவை சேர்ந்த Prof ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரச்சனைக்கு உரிய தீர்வினை ஏற்படுத்தி, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி அவர்களும் குடும்ப சொத்து மற்றும் கட்சியின் சொத்து பற்றிய ஆவணங்களை சேகரித்து வருவதால் அதுவும் என்ன மாதிரியான தாக்கத்தை அரசியலில் ஏற்படுத்தும் என்று திமுகவினர் பதற்றத்தில் உள்ளனராம்.

தலைமை செயலாளர் டெல்லியில் ஆணையம் முன்பு ஆஜராகும் நாள் தமிழகத்தில் பல திருப்பங்களை உண்டாக்குமோ?

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2702 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*