Connect with us

#24 Exclusive

#BREAKING அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ பி எஸ் ! உடன்பாடான ஒப்பந்தம்.

சென்னை :- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்தன, ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வர் பதவி ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக இரண்டாக பிரிந்து ஓபிஎஸ் தரப்பில் ஒரு அணியும் சசிகலா தரப்பில் ஒரு அணியும் சென்றது.

ஆனால் பெரும்பான்மையான எம் எல் ஏ கள் சசிகலா வசம் கூவத்தூரில் இருந்தததால் அப்போது சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு இணையவே தினகரன் தலைமையில் மற்றொரு அணி உருவாகி அவருடன் சென்ற எம் எல் ஏ கள் தகுதி இழந்தனர்.

இப்போது அதிமுகவில் தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என யாரிடமும் அதிகாரம் இல்லை, இருவரும் கூட்டு சேர்ந்தே எந்த முடிவினையும் எடுக்கவேண்டியுள்ளது, இந்நிலையில் தான் இரண்டு தரப்பும் இணையும் போது பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ் வசம் ஒப்படைப்பது என்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடருவார் என்றும் முடிவெடுக்கப்பட்டது, இதற்கு டெல்லியில் உள்ள முக்கிய தலைவர் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.

Loading...

இந்நிலையில்தான் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடமே மீதம் இருக்கும் சூழலில் முன்பே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவியை செயற்குழுவை கூட்டி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளாராம் ஓபிஎஸ். இதற்கு எடப்பாடி தரப்பு உடன்படாத பட்சத்தில் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் இரண்டு தரப்பும் தொகுதிகளை பிரித்து கொண்டு அதில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ அவர்களே அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முடிவிற்கு வந்துள்ளார்களாம்.

Loading...

மேலும் தொண்டர்கள் ஆதரவு ஜெயலலிதாவின் தேர்வான ஓபிஎஸிற்கு இருக்கும் என்று நம்புகிறார்களாம், இதனை தான் டெல்லியில் எந்த தலைவர் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதோ அவரே நேரடியாக எடப்பாடியை தொடர்புகொண்டு வலியுறித்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓ அதுதான் தென்மாவட்டங்களில் இப்போது ஓபிஎஸ் படம் பெரிதாக இடம்பெறுகிறதோ?

Loading...

Trending