#BREAKING உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக இந்தியர் ! முதல் விசாரணை சீனா மீது ! மோடியின் மாஸ்டர் பிளான் !

உலக சுகாதார நிர்வாக குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் வந்துள்ள நிலையில் அதற்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தனை தேர்வு செய்து அனுப்ப மோடி திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் வருகின்ற வாரத்தில் பொறுப்பு ஏற்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

இந்தியர் ஒருவர் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை, அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க உட்பட பல நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில் 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சுகாதாரத்துறை நிர்வாக குழு தலைவராக ஹர்சவர்தன் தேர்வு செய்யப்பட உள்ளது சீனாவிற்கு அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து, சீனா மீது சுதந்திரமான நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும், அவ்வாறு நடைபெறவில்லை என்றால் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பின் குழுவில் இருந்து வெளியேறுவதுடன் 50 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தும் என்று அறிவித்தார்.

Loading...

இந்த நிலையில் இந்தியா உட்பட 116 நாடுகள் சீனா மீது விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தில் ஆதரவாக வாக்கு அளித்தனர், அதனை தொடர்ந்து சீனா மீது கொரோனா தொற்றை பரப்பியதா அது இயற்கையானதா? இல்லை செயற்கையானதா என்பது குறித்து விசாரணை நடைபெறவுள்ளது. இந்த சூழலில் தான் இந்தியர் ஹர்சவர்தன் முக்கிய விசாரணை குழுவின் தலைவராக இடம்பெறவுள்ளார்.

சீனா தற்போது பல்வேறு அழுத்தங்களுக்கு இறையாகிய நிலையில் உற்ற தோழனான ரஷியாவும் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட காரணத்தால் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, இந்த சூழலில் சீனா மீதான விசாரணையில் உடனடியாக சுணக்கமின்றி நடைபெற ஹர்ஸ்வரதன் குழுவினை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக எல்லை மற்றும் ஐ நா சபையில் வாலாட்டி வரும் சீனாவிற்கு சரியான பதிலடியை அதுவும் மரண அடியை கொடுக்க இந்தியா முடிவு எடுத்துள்ளது, அதன் எதிரொலிதான் தற்போது இந்தியா சீனா எல்லையில் சீனா ராணுவ வீரர்களை பதம் பார்ப்பது அவர்கள் எல்லையில் உள்ளே புகுந்து சீனா முன்பு இந்திய எல்லையில் செய்த காரியங்களை செய்து வருவது என வரிசையாக அடித்து ஆட ஆரம்பித்துள்ளது.

உலக நாடுகள் தற்போது இந்தியாவை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் விரைவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்க படுகிறது, மோடி சொன்ன அகண்ட பாரத கனவு நினைவாக போகிறதோ அதற்கு W.H.O அமைப்பு உதவுமா?

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2701 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*