#BREAKING புதிய வரலாறு படைத்தார் மோடி புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது கேபினட் ! முடிந்தது திராவிட அரசியல்வாதிகளின் காலம் !!!

புதிய கல்விக் கொள்கை 2020-க்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் குழு அமைக்கப்பட்டது.

Loading...

இந்த குழு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 1ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது. புதிய வரைவு கொள்கையை திருத்தி வெளியிட்டது.வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதில் கல்வியாளர்கள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார். இந்த கருத்துகளை ஆய்வு செய்ய 15 குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Loading...

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இனி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று அழைக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக இருக்கிறது.

இதன் மூலம் இந்தியர்களின் வரலாறு இனி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் எனவும், இஸ்லாமிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் குறித்த வரலாற்று பாடங்கள் நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது, மேலும் எந்த நாடும் தங்கள் தோற்ற வரலாறை பாடமாக வைத்தது இல்லை இந்தியாவில் மட்டுமே இருந்த நிலையில் அதனை மாற்றி மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் மோடி.

இனி கல்வியின் மூலம் ஈவேரா யுனெஸ்கோ என பொய்களை பரப்பி பள்ளி மாணவர்களிடம் இல்லாத ஒன்றை புகுத்தியது போல் இனி எதனையும் திராவிட.அரசியல்வாதிகளால் புகுத்த முடியாது. இனி வருங்கால சந்ததிகள் இந்தியர்களின் வரலாற்றை படிப்பர். மேலும் 6 ம் வகுப்புவரை தாய்மொழி கட்டாயம் என்ற சரத்து வர இருப்பதால் மொழி அரசியல் செய்பவர்களுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முதலில் நாம் தமிழில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.அதனை படிக்க

©TNNEWS24
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3947 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*