#BREAKING காஷ்மீரில் 250 தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறது மத்திய அரசு வரலாற்றில் முதல்முறை !

கார்கிலில் நடந்த சுற்றுலா விழாவை துவக்கி வைத்து கவர்னர் மாலிக் மேலும் பேசுகையில்; லஞ்சம் தான் நாட்டின் பெரும் நோயாக உள்ளது. இந்த நாட்டில் அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் ஏன் துப்பாக்கி ஏந்தி பயங்கரவாதிகள் கொல்ல வேண்டும் ? இதற்கு பதில் இந்ந காஷ்மீர் வளங்களை கொள்ளை அடித்த லஞ்ச பேர்வழிகளை கொல்ல வேண்டியது தானே ! இது வரை யாரையாவது இப்படி செய்திருக்கிறீர்களா ? விடுதலை புலிகள் நிலை என்னாச்சு ? துப்பாக்கியால் இந்த அரசை பணிய வைக்க வேண்டும் என பயங்கரவாதிகள் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது.

Loading...

அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள். துப்பாக்கியால் இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம். உலகிலேயே பெரிய சக்தி வாய்ந்த இயக்கமாக கருதப்பட்ட விடுதலை புலிகள் இப்போது எங்கே இருக்கிறார்கள். தற்போது வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயங்கரவாதிகள் 250 பேரை கொல்ல திட்டமிட்டுள்ளோம்.

என்று வெளிப்படையாக அறிவித்தார் குறிப்பாக கடந்த 6 மாதத்திற்குள் அனைத்து தீவிரவாதிகளையும் வேட்டையாட இலக்கு நிர்ணயித்திருப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

Loading...

இந்திய வரலாற்றில் கவர்னர் ஒருவர் வெளிப்படையாக தீவிரவாதிகளுக்கு நாள் குறித்து அதனை காஷ்மீர் மண்ணில் இருந்து தெரிவிப்பது இதுவே முதல் முறை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றனர், மேலும் அப்பாவி மக்களின் உயிரில் விளையாடும் தீவிரவாதிகளுக்கு எந்த அனுதாபமும் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2679 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*