Connect with us

#24 Exclusive

#breaking பிரதமர் மோடி நேரலையில் பேசிமுடித்ததும் காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடியில் இறங்கியது.

Published

on

ஜம்மு காஷ்மீர்.,

இந்திய பிரதமர் மோடி இன்று நேரலையில் காஷ்மீரில் ஏன் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டது, அதனால் காஷ்மீர் மக்களுக்கு என்ன பயன் என்பது குறித்து எடுத்து சொல்லி கொண்டிருந்தார். இதனை நாடுமுழுவதும் உள்ள அனைத்து ஊடகங்களும் நேரலை செய்தன.

மறுபக்கம் இந்திய இராணுவம் அதிரடி நிகழ்வினை 40 நிமிடங்களில் நிகழ்த்தி முடித்திருக்கிறது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றில் இருந்து பொதுமக்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.

அதன் மூலம் முக்கியமான தகவல் கிடைத்துள்ளது, நாளை வெள்ளிக்கிழமை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் பொது இடங்களில் ஒன்றுகூடி மதவழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் நாளை மாலை வழிபாட்டிற்கு அனுமதி அளிப்பது, வரக்கூடிய பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கும் ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த சம்பவத்தை பயன்படுத்தி நாளை கலவரத்தில் ஈடுபட சுமார் 70 அமைப்புகள் திட்டமிட்டிருந்தன, அந்த தகவலை தெரிந்து கொண்ட இராணுவம் தற்போது 64 அமைப்புகளின் தலைவர்களை தற்போது காஷ்மீரில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவிற்கு கைது செய்து மாற்றியுள்ளது.

இது சாதாரண செயல் அல்ல முஸ்லீம் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த இடத்தில் இருந்து இவர்களை ராணுவம் வெறும் 40 நிமிடங்களில் கண்டறிந்து உடனடியாக மாநிலத்தில் இருந்து கைது செய்து வேறு மாநிலத்திற்கு இராணுவ விமானத்தில் அனுப்பியுள்ளது.

எப்படியாவது ஏதேனும் கலவரம் நிகழும் அதனை வைத்து இந்திய அரசாங்கத்தை ஏதேனும் செய்யலாம் என்று சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கலவரத்தை தூண்டி துண்டாட காத்திருக்கும் பாகிஸ்தானும் எதிர்பார்த்து கொண்டிருக்க மிகவும் நேர்த்தியாக பிரிவினைவாத அமைப்பினரை வெகு விரைவாக கைது செய்திருப்பதன் மூலம் இந்திய ராணுவம் மிக பெரிய கலவரத்தை கண்டறிந்து தடுத்துள்ளது.

தற்போது இந்த செய்தியினை ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அங்கு பிரதமர் மோடி நேரலையில் காஷ்மீரில் எந்த கலவரமும் நிகழாது என வாக்குறுதி கொடுக்க அதை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது இந்திய இராணுவம்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share