Connect with us

#24 Exclusive

BREAKING இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இனி அரசு வேலை தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !

தமிழக அரசு சற்றுமுன் பி இ பட்டதாரிகள் பலருக்கும் மகிழ்ச்சித்தரும் அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது, இதன்மூலம் பொறியியல் பட்டதாரிகள் பலரின் குடும்பங்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு ஒன்றிற்கு பட்டப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறுகின்றனர், ஆனால் முறையான வேலை வாய்ப்பு இல்லாத சூழலில் கிடைக்கும் வேலையை செய்துகொண்டு மாதம் 8 ஆயிரம் சம்பளத்திற்கு கூட பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலை கருத்தில் கொண்டு பொறியியல் பட்டதாரிகளை பி எட் படித்தவர்களுக்கு இணையாக தகுதி உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதன்மூலம் இனி பி.இ. படித்தவர்களும் டெட் என்றஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி பள்ளியில்கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழகஅரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பி.இ.படித்தவர்கள் டெட் தேர்வு எழுதி பள்ளியில்6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித
ஆசிரியராக பணியாற்றலாம். பி.இ. மற்றும்
பி.எட்., படித்தவர்களுக்கு ” சமநிலை
அந்தஸ்து” வழங்கி அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.

Loading...

இந்த தகவல் மூலம் இனி பொறியியல் பட்டதாரிகள் அரசு பள்ளியில் மாதம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெறக்கூடிய வகையில் பணியாற்றலாம். பல பெண் பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்த அறிவிப்பு பயனுள்ள வகையில் இருக்கும் என்றும் இதில் பொறியியலில் அனைத்து பாட பிரிவினை தேர்வு செய்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

©TNNEWS24

Loading...

Trending