Connect with us

#24 Exclusive

BREAKING திமுக – பாமக மோதல் தெறித்து ஓடிய வேல்முருகன் குழுவினர் அதிரடிப்படை குவிப்பு !

Published

on

விக்கிரவாண்டி.,

மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே இன்று விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது, விக்கிரவாண்டி தொகுதியில் நேரடியாக தொடர்ந்து பாமக மற்றும் திமுகவினர் ஆரம்பம் முதலே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தொடர்ந்து திமுகவை கடுமையாக எதிர்த்து வருகிறது, பாமக திமுகவை தொடர்ந்து எதிர் கேள்விகள் எழுப்பிவர, அதற்கு திமுக நேரடியாக பதில் கூறாமல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் பிற வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களை கொண்டு பதிலடி கொடுத்து வந்தது.

Loading...

ஒரு கட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை கடுமையான வார்த்தைகளால் வேல்முருகன் விமர்சனம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது, இதனால் பாமகவினர் வேல்முருகன் மற்றும் திமுகவினர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் வேல்முருகன் விக்கிரவாண்டி தொகுதியில் ஆசரக்குப்பத்தில் வரவிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு பாமகவினர் குவிந்தனர்.

Loading...

இந்நிலையில் தற்போது வாக்காளர்களை உள்ளே அனுமதிப்பது குறித்து இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது, அதனை தொடர்ந்து பாமகவினர் கூடியிருந்த திமுக மற்றும் வேல்முருகன் குழுவினரை அடித்து ஓடவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending