BREAKING பாஜக ஜார்கன்ட் மாநில தலைவராகிறார் தோனி ! மாநிலத்தில் கோலாகலம் !!!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி வருகின்ற IPL தொடருக்கு பின்னர் ஓய்வு பெறவிருப்பதாகவும், அவர் பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

உலகக் கோப்பை தொடருக்கு பின்பாக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியின் திட்டம் என்ன என்பதுதான் தற்போது வைரலான செய்தியாக இருக்கிறது. தோனி தொடர்ந்து விளையாடுவாரா, அல்லது தோனி ஓய்வை அறிவிப்பாரா என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை தோனி தரப்பில் இருந்து ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. அரசியல் குறித்தும் தோனி இதுவரை எதுவுமே பேசவில்லை.இந்த நிலையில்தான் தோனி பாஜகவில் சேர போகிறார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தது. தோனி வந்தால் கண்டிப்பாக கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜகவை சேர்ந்த சில உறுப்பினர்களும் பேட்டி அளித்து இருந்தனர். தோனி ஓய்விற்கு பின் பாஜகவில் இணைவார் என்று வரிசையாக நிறைய கணிப்புகளும் வெளியானது.

Loading...

ஆனால் எப்போதும் போல, மைதானத்தில் அமைதியாக இருப்பது போலவே தோனி இதற்கும் அமைதியாக இருந்தார். அரசியல் திட்டங்கள் குறித்து தோனி எதுவுமே தெரிவிக்கவில்லை. பாஜகவினர் தெரிவித்த கருத்துக்கும் தோனி எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜார்கண்ட் மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி பாஜகவில் இணைய இருப்பதாகவும், கடந்த பல மாதங்களாக நிதானமாக எடுத்த யோசனையின் அடிப்படையில் தோனி இந்த முடிவினை எடுத்து இருப்பதாகவும், தற்போது ஆட்சியை இழந்த பாஜகவிற்கு ஜார்க்ஹண்ட் மாநிலத்தில் நிலையான முகம் தேவை படுவதாலும் மேலும் இந்தியா முழுவதும் தோனி செல்வாக்கு கைகொடுக்கும் என்று பாஜக எதிர்பார்த்திருந்தது.

இந்நிலையில்தான் தோனியின் நிலைப்பாடு அக்கட்சிக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கு மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தோனியின் அரசியல் நகர்வு வருகின்ற பீகார் சட்டசபை தேர்தலில் தொடங்கும் என்றும், இதற்கான முழு முன்னேற்பாடும் தோனி ரசிகர்களுக்கு மத்தியில் சென்னையில்தான் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தோனி பாஜகவில் இணைந்ததும் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் எனவும் அதற்கு முன்னேற்பாடாக பீகார் தேர்தல் களத்தை தோனி பயன்படுத்தி கொள்வார் என்றும் கூறப்படுகிறது. (தமிழில் முதலில் இந்த செய்தியை தெரிவித்தது உங்கள் TNNEWS24)

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*