அடுத்த அதிரடி டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்துகிறது மத்தியஅரசு. ஒரே கிளிக் மொத்தமும் ஓவர். இது வேற லெவல்

Loading...

கடந்த 2014- ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றத்தில் இருந்து ஒவ்வொரு திட்டங்களையும் நேர்த்தியாக நாள் குறித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்திய உதாரணம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் போராட்டம் வரும் என்று சொல்லிவந்த நிலையில் அதிரடியாக நீக்கி தற்போது வெற்றியையும் அடைந்துள்ளது மத்திய மோடி அரசு.

அந்த வகையில் இந்தியாவின் பழைய நடைமுறைகளை மாற்றி காலத்திற்கு ஏற்றாற்போல் டிஜிட்டல் முறையில் பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறது மோடி அரசு அதில் மற்றொரு அதிரடியாக கடந்த 2017 ம் ஆண்டு வீட்டு முகவரியை மாற்றி அனைவருக்கும் டிஜிட்டல் எண்களை வழங்குவது பற்றிய திட்டத்தினை இரண்டு நகரங்களில் சோதனை செய்து வந்தது.

Loading...

இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விசாலமும் அகற்றப்பட்டு டிஜிட்டல் டேங் முறை பயன்படுத்தப்படும் அளவிற்கு இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு 6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் டேக் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக ஈ-லொகேஷன், ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

என்ன லாபம்..

இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.

பயன்பாடு

இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும். சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.

மேப்மைஇந்தியா

இப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லவேண்டும் என்றால் மேப்மைஇந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.

உதாரணம்: இந்த டிஜிட்டல் டேக் ABC11D உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சு தகவல்களையும் சேமித்து வைத்திருக்கும்.

டெல்லி, நொய்டா ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்றது வெற்றியடைந்ததை தொடர்ந்து 2021 – ற்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தினை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இனி சொத்து வரி முதல் ஒருவரின் இருப்பிடம் தேடல் வரை அனைத்தையும் ஒரே கிளிக்கில் முடித்துவிடலாம், மேலும் பினாமி பெயரில் அரசை ஏமாற்றி வைத்திருக்கும் சொத்து அடையாளங்களும் இதன் மூலம் எளிதாக கண்டறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்கும் மறைமுகமாக இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என்றும் கணக்கிட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*