Connect with us

#24 Exclusive

#breaking தமிழகத்தில் முதல் விக்கெட் அவுட் ARMY FRIENDS இயக்கம் அதிரடி !

Published

on

சென்னை.,

நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்து, இந்திய தேசம் , தேர்தல் ஆணையம், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஒருமையில் பேசிவந்தார், தொடர்ந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசுவதும் முடிந்தால் என்னை கைது செய்துகொள்ளட்டும் என்று சவால் விடுத்திருந்தார் மன்சூர்.

Loading...

இந்நிலையில் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை தரக்குறைவாக விமர்சித்ததுடன் NIA அமைப்பிற்கு அதிகாரம் வழங்கியது தொடர்பாக கடுமையான இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதுடன் முடிந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்திருந்தார்.

Loading...

அதனை தொடர்ந்து ARMY FRIENDS TAMILNADU என்ற அமைப்பு மற்றும் பாஜக, இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் காவல் துறையில் மன்சூர் அலிகான் பேச்சை சுட்டிக்காட்டி தனித்தனியாக புகார் அளித்தனர். தற்போது மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர்கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் இன்று மாலை (01/08/19) ஈடுபட இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ய போலீசார் விரைந்தனர்.

இந்த தகவலை அறிந்த மன்சூர் அலிகான் தெறித்து ஓடி இருக்கிறார், குறிப்பாக என்னை கைது செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தற்போது மன்சூர் அலிகான் காவல்துறையினரை பார்த்து தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மன்சூர் அலிகானை விரைந்து பிடிக்கவேண்டும் என்றும் இதற்கு காரணமாக இருந்த ARMY FRIENDS அமைப்பு உள்ளிட்ட அனைவருக்கும் இணையத்தில் பலரும் தங்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

விவரம் தெரிந்தவர்கள் மன்சூர் அலிகான் குறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் முதல் விக்கெட் அவுட்.. அடுத்தது யார்?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552