Connect with us

#24 Exclusive

முக்கியசெய்தி 3400 கி.மீ பகுதிக்கு எச்சரிக்கை, இரண்டாவது அணுஆயுத சோதனையை உறுதி செய்தது இந்தியா !

நமது இராணுவம் தொடர்ந்து வலுப்படுத்துவதில் மத்திய அரசு முழு முயற்சியினை எடுத்து வருகிறது, குறிப்பாக முப்படைகளுக்கு தலைமை தளபதியை நியமித்ததுடன், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் இலக்கினைநேரடியாக குறிவைத்து விமான படைத்தளங்களை உருவாக்கி வருகிறது, அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கள்ளச்சந்தையில் வாங்கி குவிப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்தியா தனது வலிமையை சோதனை மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

கடந்த திங்கள் அன்று நமது  Defence Research and Development Organisation (DRDO) வெற்றிகரமாக  கே-4 intermediate-range, nuclear-capable, submarine-launched ballistic missile (SLBM) சோதனை செய்தது. ஆந்திரா மாநிலத்தின் கடலோர பகுதியில் இருந்து நீரடி குழாய் போன்ற ஏவு அமைப்பின் உதவியுடன் இந்த அதிமுக்கிய சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை குறித்து டDRDO எந்த அதிகார பூர்வ தகவலும் தற்போது வரை தெரிவிக்கவில்லை எனினும் ” Notice to Airmen” எனப்படும் நோட்டம் எச்சரிக்கையை மட்டும் வங்காளவிரிகுடா பகுதியில் 3,400 km அகலத்திற்கு ஜனவரி 19 முதல் 21 வரை அறிவித்திருந்தது இதில் இருந்தே சோதனை செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம்.

Loading...

 K-4 SLBM கிட்டத்தட்ட 2 டன் அணுவெடிபொருளை சுமந்து 3500கிமீ வரை செல்லும் ஆற்றல் கொண்டது.இது மாபெரும் அழிவை எதிரிகளுக்கு ஏற்படுத்தும்.
கடந்த முறை அரிகந்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 750கிமீ வரை செல்லும் K-15 சகரிகா SLBM உடன் இந்த புதிய K-4 ஏவுகணை வருகிற அனைத்து அரிகந்த் ரக நீர்மூழ்கியிலும் இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது, எந்த நாடேனும் நமது இந்தியாவை அணுஏவுகணை கொண்டு தாக்கினால் அவர்களுக்கு இரண்டாம் கட்ட தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த அழிவினை இந்த புதிய இணை உருவாக்கும்

Loading...

இதற்கு முன் கே-15 750கிமீ வரை மட்டுமே செல்லும் என்பதால் நமது நீர்மூழ்கி இலக்கிற்கு 750கிமீ வரை செல்ல வேண்டும். ஆனால் தற்போது 3500கிமீ தூரத்தில் இருந்தே எதிரிகளின் இலக்கை நாம் தாக்கலாம் மற்றும் இதன் மூலம் நீர்மூழ்கி கப்பல் எதிரிகளிடம் சிக்குவதற்கான வாய்ப்பும் குறைவு.

இது முழுக்க முழுக்க சீனாவை மையப்படுத்தி உருவாக்க பட்டிருப்பதுடன், கடற்பரப்பில் இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பல படுத்த உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, சமீபத்தில் தஞ்சை விமான படை தளம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending