எல்லை மீறுகிறார்களா இஸ்லாமிய அமைப்புகள் நேற்று ரவீந்திரநாத் கார் தாக்குதல் இன்று மற்றொரு சம்பவம் !! ஊரே கூடி வீடியோ எடுத்து மகிழ்ச்சி !!

எல்லை மீறுகிறார்களா இஸ்லாமிய அமைப்புகள்  நேற்று ரவீந்திரநாத் கார் தாக்குதல் இன்று மற்றொரு சம்பவம் !! ஊரே கூடி வீடியோ எடுத்து மகிழ்ச்சி !!

சமூகவலைத்தளம் :- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் அமைதியாக இருக்கும் மாநிலத்தில் மதம் மோதல்கள் உண்டாக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுமோ என பலரும் எண்ணும் நிலைக்கு வந்துள்ளது, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டார்.

கடந்த வாரம் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேனா விநியோகம் செய்த சென்னையை சேர்ந்த கடைகாரர் இஸ்லாமிய அமைப்புகளால் மிரட்டப்பட்டார்,
அதனை தொடர்ந்து கம்பம் பகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வாகனம் மற்றும் உடன் சென்ற பாஜவினர் வாகனம் தாக்கப்பட்டது.

தற்போது குடியுரிமை சட்டத்தில் என்னென்ன சொல்ல பட்டிருக்கிறது என்றும் குடியுரிமை சட்டத்தால் யாருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் எந்த பாதிப்பு இல்லையென்று கூறி அதிமுக நிர்வாகி பீர் முகமது தனது பகுதியில் துண்டு பிரச்சாரம் செய்தார், அரசியலமைப்பு சட்டம் படி தனது நியாத்தை எடுத்துக்கூறிய அவரை ஊரில் உள்ள சில அடிப்படைவாதிகள் மிரட்டியதுடன்.

Loading...

ஊரில் உள்ள ஆட்களை கொண்டு அவரை மிரட்டி எவ்வாறு நீ ஊருக்குள் வந்து குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நோட்டீஸ் கொடுக்கலாம் எனவும் சிரியவர்களை கொண்டு மிரட்டியுள்ளனர், அத்துடன் அதனை வீடியோ எடுத்து எங்களுக்கு எந்த சட்டமும் செல்லுபடி ஆகாது நாங்கள் வைத்ததுதான் சட்டம் எனவும் இனி யாராவது ஊருக்குள் நோட்டீஸ் கொண்டுவந்தால் இவரது நிலைதான் என கூறி தாக்கியுள்ளனர் மேலும் அவரை மிரட்டியுள்ளனர்.

Loading...

இதற்கு முன்னர் இதே அதிமுக நிர்வாகி கடந்த பொங்கல் அன்று 1000 ரூபாய் அரசாங்கம் கொடுத்தபோது அங்கு சென்று இப்போது கூறுங்கள் நாம் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடுவது இல்லை ஆனால் மோடியும் அம்மா அரசும் கொடுத்த 1000 ரூபாயை வாங்குகிறோம், இதை பாகிஸ்தான், பங்களாதேஸ் காரனுக்கும் கொடுக்கணுமா என கேட்டு பலரையும் கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது பலரும் இந்தியர்கள் என்ற உணர்விற்கு திரும்பிவர ஆனால் சில இஸ்லாமிய அடிப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை மிரட்டல் விடுப்பதும், அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதும் பலரையும் முகம் சுளிக்க செய்வதுடன் நாளை இதே போல் மற்ற மதத்தவரும் மதம் ரீதியாக வேறு முடிவினை எடுத்தால் என்ன ஆகும் என்ற பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

கம்பத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வாகனம் தாக்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை இஸ்லாமியர்கள் கடைகளில் வியாபாரம் செய்வதில்லை என ஒரு தரப்பினர் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் இதே நிலை உண்டானால் என்ன ஆகும் என பலரும் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *