Connect with us

#24 Exclusive

தமிழகத்தில் மலரும் தாமரை.! முதல் முறையாக 100 இடங்களில் வெற்றியை நோக்கி பாஜக !

தமிழக ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்
நேற்று காலை துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவும் தொடர்ந்த நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து வெளியாகும் முடிவுகளின் படி அதிமுகவும் திமுகவும் சமபலத்துடன் காணப்படுகிறது மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர் . ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் திமுக சற்றே முன்னிலை வகிக்கிறது . இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது பல இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது .

தற்போதைய நிலவரப்படி மாவட்ட கவுன்சிலருக்கான இடங்களில் 9 இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது இன்னும் 20 இடங்களின் முடிவுகள் வெளியாகாத நிலையில் அதில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளது .

Loading...

ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 85 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது . மேலும் இன்னும் 300 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் அதில் 10 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது . இதுவரை மாவட்டம் , ஒன்றியம் இரண்டையும் சேர்த்து 94 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் .

Loading...

முழுமையான முடிவுகள் வெளியானால் பாஜக மொத்தம் 100 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது . உள்ளாட்சி தேர்தலில் பாஜக இத்தனை இடங்களை கைப்பற்றுவது இதுவே முதல் முறை இதனை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending