Connect with us

சிறப்பு அரசியல்

கடும் பரபரப்பு பாஜக கூட்டத்திற்குள் புகுந்து செல்போன் பணத்தை பறித்து சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் வீடியோ ஆதாரம் சிக்கியது !!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பாஜக சார்பில் CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றது, இக்கூட்டமானது அலங்காநல்லூர் பாஜக ஒன்றிய தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் பாஜகமாவட்ட தலைவர், மகா. சுசீந்திரன், மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி இன்னும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் நடந்தது முதல் பாஜகவினர் பல்வேறு கட்சிகளின் சார்பில் பொய்யான தகவலை பரப்பி வருவதை குறிப்பிட்டு பேசினர், இந்நிலையில் மாவட்ட தலைவர் சுசீந்திரன் பேச செல்லும் போது அந்த இடத்தில் சுமார் 10 நபர்கள் உருட்டு கட்டை, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு கூட்டம் நடத்தும் இடத்திற்கு வந்துள்ளனர், தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமிட்ஸா ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதோடு மாவட்ட தலைவர் துணை தலைவரை தாக்க முற்பட்டுள்ளனர்.

புகார் மனு – கோவிந்த மூர்த்தி

அப்போது பிரச்சாரத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் கவத்துறையினர் விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர், இந்த சூழலில்தான் யாரும் எதிர்பாராத விதமாக பிரவின் என்பவரது மொபைல் போன் மற்றும் 5000 ரூபாய் பணத்தினை பறித்து சென்றதாக பாஜகவினர் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்துள்ளனர், அதிலும் குறிப்பாக கூட்டத்திற்குள் வந்து பணத்தை பறித்து சென்றதில்..,

Loading...

விடுதலை சிறுத்தை கேட்கடை ஆட்டோ சங்கத்தின் நிர்வாகிகள் கடல் கேசன் S/O பாக்கியம், பிச்சைக்கனி S/O பொம்மன், ஸ்டாலின், சிந்தனை வளவன் அலங்காநல்லூரை சேர்ந்த அதிவீரபாண்டியன், எர்ரம்பட்டியை சேர்ந்த பாலமுருகன், சால்வார்பட்டியை சேர்ந்த தமிழ் ஆகியோர் மீது அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட துணை தலைவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Loading...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காவல்துறையினர் அனுமதியுடன் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் ஆயுதங்களுடன் நுழைந்து மிரட்டியது இல்லாமல் கூட்டத்தில் உள்ளவர் பணத்தையும், செல்போனையும் பறித்து சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பெரியார் சிலை சேதப்படுத்த பட்டதற்கு பாமக மீது குற்றம் சுமத்திய திருமாவளவன் தனது கட்சியை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் பணம் செல்போனை பறித்து சென்றது குறித்து வாய் திறப்பாரா? எனவும்..,

காவல் நிலையத்தில் புகார் அளித்த பாஜகவினர்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சில இஸ்லாமிய அமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினரால் சீர்குலைந்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. பணம், செல்போன் பறித்து சென்றது குறித்த தகவல் தற்போது பரவிய நிலையில் கடும் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் விடுதலை சிறுத்தை கட்சியினர் உண்டாகி வருகின்றனர். (Note future image – representation image)

©TNNEWS24

Loading...

Trending