Connect with us

#24 Exclusive

பாஜகவில் இணைந்ததும் தமிழிசை பாணியில் புதிய வசனத்தை சொல்லிய சசிகலா புஷ்பா? கட்சியில் என்ன பதவி?

ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்துள்ளார், டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தமிழக பாஜக மேலிடம் பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று தன்னை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்.

நீண்ட நாட்களாக திமுகவிற்கு எதிரான கருத்துக்களையும், திராவிட சித்தாந்தங்களையும் எதிர்த்து பேசிவந்தார், ராஜ்ய சபா உறுப்பினராக வைகோ தேர்வு செய்யப்பட்ட போது, அவரது பதவியை நீக்கவேண்டும் என ராஜ்யசபா தலைவரிடம் மனு கொடுத்தார், ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தபோது, ஒரு மதத்தினை இழிவாக பேசிய ஈவெரா பெயர் வைக்க கூடாது எனவும்.,

தேசத்திற்காக உயிரை அர்பணித்த திருப்பூர் குமரன் பெயரினை வைக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பினார். இந்த சூழலில் இன்று காலை முதல் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைய போவதாக தகவல்கள் வெளியான நிலையில் மாலை பாஜகவில் இணைந்தார், இணைந்ததும் முன்னாள் பாஜக தலைவராக இருந்த தமிழிசை பாணியில் புதிய வசனத்தை பேசியுள்ளார், தமிழிசை தாமரை மலரும் மலர்ந்தே தீரும் என அனைத்து மேடைகளிலும் பேசிவந்தார்,

Loading...

அதில் சிறிது மாற்றங்களுடன் “தமிழகத்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது” என்று பேசியுள்ளார். பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவிற்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படும் எனவும், தூத்துக்குடி முன்னாள் மேயராக பதவி வகித்த சசிகலா புஷ்பாவின் வருகை கட்சியை வலுப்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Loading...

சமீபத்தில் பாஜகவில் ராதாரவி, இயக்குனர் rk சுரேஷ், நமீதா, இயக்குனர் பேரரசு இன்னும் பலர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending