Connect with us

#24 Exclusive

ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பாஜக அரசு திட்டமா.?!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குடியுரிமை சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றபட்டது.இந்த மசோதாவுக்கு அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களும்,எதிர்கட்சிகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை ஆதரித்தும் தேசவிரோத தீய சக்திகளுக்கு எதிராகவும் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக தலைவர் C.P.ராதாகிருஷ்ணன் பேசும் போது குடியுரிமை சட்டதிருத்தம் மசோதா வேண்டும் என காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது கூறி வந்தது.ஆனால் அதை நிறைவேற்ற அவர்களுக்கு திரானி இல்லை.ஆனால் மோடி பிரதமராக வந்த பிறகு இந்த தேசத்தின் தீர்க்கப்படாமல் இருந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து,முத்தலாக்,அயோத்தி பிரச்சினை போன்ற பல நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளை தீர்த்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகள் புகைச்சலில் உள்ளனர்.இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீரிலும் இந்தியா வுடன் ஆசாத் காஷ்மீரை சேர்க்க கோரி போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.கூடிய விரைவில் ஆசாத் காஷ்மீரும் இந்தியாவுடன் இனையும்.

இலங்கை தமிழர்கள் விசியத்தில் திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.திமுகவின் இந்த கபட நாடகத்தை மக்கள் ஒருபோதும் நிச்சயம் நம்ப போவதில்லை.2009ல் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சாக காரணமாக இருந்தது திமுக என்பதை தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.இலங்கை தமிழர்கள் நலனுக்காக எனக்கூறி கட்சி ஆரம்பித்த சீமான் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்தது இல்லை.அவர்களை வைத்து பிழைப்பு நடத்தி இன்று அவர் தான் சுகபோகமாக வாழ்கிறார்.

Loading...

பாகிஸ்தான் மற்றும் வங்காளத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு அவர்கள் தாயகத்திற்க்கு திரும்பி சென்றால் அங்கு வாழ்வதற்கான இருப்பிடமோ,தொழில் மற்றும் வேலைவாய்ப்போ இல்லை.அதை விட முக்கியம் அங்கு அவர்கள் ஒரு இந்துவாக வாழ்வதற்கு அவர்கள் உயிருக்கு எந்த ஒரு உத்திரவாதம் இல்லை.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதற்க்கான கால சூழ்நிலையும்,அரசியல் சூழ்நிலையும் அங்கு இல்லை.காரணம் அவர்கள் மதத்தின் பெயரால் அந்நாட்டு பெரும்பான்மையினரால் கொடுமைபடுத்தபட்டு உயிர் பிழைக்க ஓடி வந்தவர்கள்.

Loading...

ஆனால் இலங்கை விவகாரம் முற்றிலும் வேறு.அங்கு மதத்தின் பெயரால் தாக்குதல்களோ,படுகொலைகளோ நிகழ்த்தபடவில்லை.ஆரம்பத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது இன ரீதியான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது உன்மை.ஆனால் அதன் பிறகு அவர்களின் ஒட்டுமொத்த கோபமும் LTTE மீது தான் இருந்தது.இப்போது தமிழர்கள் அங்கு நலமாக,பாதுகாப்புடன் தான் வாழ்கிறார்கள்.அரசியலிலும்,அரசாங்கத்திலும் அங்கம்வகிக்கிறார்கள்.கல்வி,மருத்துவம்,தொழில்,வேலைவாய்ப்பு என பாதுகாப்பாக உள்ளனர்.இங்கு உள்ள இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக வாழ வேண்டியவர்கள் கிடையாது.அவர்கள் அவர்கள் நாட்டில் அவர்கள் சொந்த மண்ணில் உரிய உரிமைகளோடு வாழ வேண்டியவர்கள்.மீல்குடியமர்வு ஒன்றே அவர்களுக்கான ஒரே நிரந்தர தீர்வாகும்.
அதற்கான அனைத்து முயர்ச்சிகளையும் மத்திய பாஜக அரசு எடுக்கும்.இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலம் அதற்கான தீர்வு காணப்படும்.இந்திய அரசு சார்பில் அகதிகளாக இங்கு உள்ள இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டிகொடுத்து உரிய ராஜமரியாதையுடன் அவர்கள் இலங்கையில் குடியமர்த்தபடுவர்.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் தற்போது 107 முகாம்களில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending