லடாக் எங்க இருக்குன்னு தெரியுமா? 15 நிமிஷம் கனிமொழி அவர் முகத்தையே பார்க்கல கடைசியா ஒரு கேள்வி கேட்டாரே அந்த கிழி வீடியோ இணைப்பு !

Loading...

டெல்லி.,

தமிழக ஊடகங்கள் வெளியிடாத சுவாரசிய தகவல்கள் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது, எந்த திமுக எம் பி கள் நாடாளுமன்றத்தில் பாஜகவை அலறவிடுவார்கள் என்று திமுக தமிழகத்தில் வாக்கு சேகரித்ததோ அதற்கு எதிர் மறையாக ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றனர்.

Loading...

காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டு, காஷ்மீர் மாநிலம் ஜம்முகாஷ்மீர், மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு மக்களும், அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்திருந்தன.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதற்கும், சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது எதேச்ச அதிகார போக்கு என்று கூச்சலிட்டனர். ஒரு படி மேலே சென்று முதுகெலும்பு உள்ளவர்கள் இதனை எதிர்ப்பார்கள் என்று நக்கலாக பேசி சிரித்தனர், அதற்கு அதிமுக எம் பி ரவீந்திரநாத் கடுமையாக பதிலடியினையும் கொடுத்தார்.

ஆனால் தற்போது லடாக் பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங்_நாம்கியால் திமுக காங்கிரஸ் எம் பி கள் மானத்தை வாங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இங்கு காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலர் காஷ்மீர் பகுதிக்கு வந்திருக்கிறார்களா? லடாக் என்றால் என்ன வென்று தெரியுமா? எங்க இருக்கிறது என்று தெரியுமா?

நான் லடாக் பகுதியில் இருந்து வந்தவன் அங்கு நிலையான பள்ளிக்கூடம் இல்லை, மருத்துவமனை இல்லை, கல்லூரி இல்லை மத்திய அரசு உதவ முடியாது, எத்தனை அடக்குமுறைகள் யாரும் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள், இன்று நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம், எங்கள் பகுதியில் இருந்தவர்களுக்குத்தான் அதன் வழி தெரியும் 1948 ஆம் ஆண்டில் இருந்து யூனியன் அந்தஸ்து வேண்டும் என்று போராடி வந்தோம்.

ஆனால் இங்கு அமர்ந்துகொண்டு வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கவேண்டும் என்று கத்துகிறீர்கள் எங்கே லடாக் பூகோள பகுதி பற்றி சொல்லுங்கள் என்று கனிமொழியை பார்த்து கேட்க முகத்தை தூக்கி அவரை பார்க்கவே இல்லை, முதுகெலும்பு இருக்கிறதா என்று கேட்டவர் இதற்கு பதில் சொல்லுவரா?

காஷ்மீர் மாநிலத்தில் எத்தனை இனங்கள் வாழ்கிறோம், அவர்கள் கலாச்சாரம் என்ன என்பது தெரியுமா என்று திமுக காங்கிரஸ் எம் பி களை பார்த்து கடைசியாக கேட்க அவ்வளவுதான் முகத்தை கீழே போட்டு விட்டார்கள், உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஜம்யாங்_நாம்கியால் பேச்சை கைதட்டி வரவேற்றார்.

மொத்தத்தில் திமுக எம் பி கள் நேற்று இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங்நாம்கியாலிடம் சிக்கி சின்னாபின்னமானதுதான் மிச்சம், ஒரு பக்கம் ரவீந்திரநாத் தனது பங்கிற்கு கச்சத்தீவு விவகாரத்தில் வைத்து செய்துவிட்டார் மறுபக்கம் ஜம்யாங்நாம்கியால் மரண அடி அடித்துவிட்டார்.

ஆமா லடாக் எங்க இருக்கு என்ற கேள்விக்கு தற்போதுவரை கனிமொழி வாயை திறக்கவில்லையே ஏன்?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*