பாஜகவில் இணைந்தரா காடுவெட்டி குரு மகன்? என்ன பொறுப்பு?

முன்னாள் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Loading...

இந்நிலையில் கனலரசன் பாஜகவில் சேர விருப்பதாக சில இணையதளங்களில் தகவல்கள் பரவின இது குறித்து பாஜக வட்டாரங்கள் இடையே விசாரித்ததில் கனலரசன் பாஜகவில் சேர அவரது மாமா உதவியுடன் அணுகியதாகவும், இதுகுறித்து விரைவில் உடன்பாடு எட்டினால் அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு கட்சியில் எது போன்ற பொறுப்புகள் கொடுக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, அதே நேரத்தில் வரும் காலத்தில் மாற்று இயக்கத்திலும் அதே நேரத்தில் இந்து மதம பிடிப்புடன் இருக்கும் தேசிய இயக்கமான பாஜகவில் இணைந்து இப்போதே உழைத்தால் வரும்காலத்தில் நல்ல நிலைக்கு வரலாம் எனவும் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

கனலரசன் பாஜகவில் இணைவது நிச்சயம் கனலரசனுக்கு நல்ல முடிவாக இருக்கும் என்றும்,விரைவில் இதுகுறித்த அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்புதான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது, பாஜகவில் இதற்கு முன்னர் திரை பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*