பாஜகவினருக்கு குட் நியூஸ் மற்றொரு மாநிலமும் இணைகிறது !!

டெல்லி தேர்தல் முடிவு பிஜேபிக்கு அதிர்ச்சி யை அளித்தாலும் அதில் உடனடியாக மீண்டு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது என்பதை இன்று ஜார்கண்டில் பாபுலால் மராண்டி பிஜேபியில் இணைவதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அமித்ஷாவின்அரசியல் கணக்குகள் அனை த்து தேர்தலிலும் பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்கிற பிஜேபியினரின் நினைப்பில் சமீபகாலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் மண்ணை அள்ளி போட்டுவிட்டன.

Loading...

இந்த பின்னடைவில் இருந்த மீள பிஜேபிக்கு பல வெற்றிகள் தேவைப்படுகிறது ஆனால் இந்த ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலை தவிர வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லாததால் பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள மாநிலங்களை நோக்கி அமித்ஷாவும் நட்டாவும் பார்வையை திருப்பி இருக்கிறார்கள்.

இதில் மகாராஸ்டிரா மத்திய பிரதேசம் ஜார்கண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பிஜேபி. ஆட்சி அமைவதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டது டெல்லி தேர்தலுக்காக தள்ளி
போடப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் இப்பொழுது துரிதமாக நடைபெற்று வருகிறது.

Loading...

மகாராஸ்டிரா மத்திய பிரதேசம் ஜார்கண்ட் சிக்கிம் மாநிலங்களில் கர்நாடகா மாதிரி ஆட்சிக்கு அருகில்தான் இருக்கிறது .இதில் எந்த மாநிலம் முதலில் பிஜேபிக்கு வாய்ப்பளிக்கும் என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

நேற்று உத்தவ் தாக்கரே ஏப்ரலுக்குள் இந்த.ஆட்சியை பிஜேபி கவிழ்த்து விடும் என்று ஓப்பனாகவே கூறி விட்டார். மத்திய பிரதேசத்தில் ஜோதிர்ஆதித்யா கமல் நாத்தை காலி செய்ய களம் இறங்கி விட்டார்.
இந்த நிலையில் ஜார்கண்ட்டிலும் ஆட்சி மா ற்றத்திற்கான அறிகுறியாக பாபுலால் மராண்டி பிஜேபிக்கு மீண்டும் வருகிறார். பழங்குடி
மக்கள் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜே பியின் பழங்குடி மக்களின் அடையாளமாக இருந்த பாபுலால் மராண்டி மீண்டும் பிஜேபி க்கு வருவதன் மூலமாக கடந்த சட்டமன்ற
தேர்தலில் பிஜேபி செய்த தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பிஜேபி போட்ட தப்பு கணக்கு என்னவென்றால் பாபுலால் மராண்டியின் ஜார்கண்ட் விகாஸ் பார்ட்டியும் சிபுசோரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் 25 % அதிகமாக உள்ள பழங்குடி மக்களின் ஓட்டுக்களை பிரித்து கொள்ளும்.

இந்த இடைவெளியில் ஓபிசி மக்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைத்தது. ஆனால் ஜார்கண்ட் பழங்குடி மக்களோ ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பின்னால் அணி திரண்டு நின்றனர்.
ஜார்கண்ட்டில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 28 தொகுதிகள் எஸ் டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவை.

இந்த 28 தொகுதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால்
2014 சட்டமன்ற தேர்தலில் எஸ்டி பெல்ட்டில் பிஜேபி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.பிஜேபி ஆட்சியை இழக்க முக்கிய
காரணம் பழங்குடி மக்களின் வாக்குகளை பெற முடியாமல் போனதே.

பிஜேபியின் ஓபிசி அரசியல் ஜார்கண்ட்டில்.தோல்வி அடைந்துவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஓபிசி முதல்வர் என்று பெருமை பேசிய ரகுபர் தாஸ் தன்னுடைய சொந்த தொ குதியான கிழக்கு ஜாம்ஷெட்பூரில் பிஜே பியி ல் இருந்து பிரிந்து போட்டியிட்ட சர்யூராயிடம் தோல்வி அடைந்த பொழுதே ஜார்கண்ட்டில்
ஓபிசி அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது.

முதல்வர் ரகுபர்தாஸ் 5 முறை போட்டியிட்டு வென்ற கிழக்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியில்
மேற்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியில் இருந்து வந்து சுயேச்சையாக போட்டியிட்டு ராஜபுத்திரரான சுதிர் ராய் வென்றதன் மூலமாக ஜார்
கண்ட் மாநிலத்தில் பிஜேபி கண்ட ஓபிசி ஆட்சி கனவு அம்பேல் ஆனது.

அதனால் மீண்டும் பழங்குடி மக்களை முன்வைத்து பாலிடிக்ஸை ஆரம்பித்து விட்டது.இதற்காக பாபுலால் மராண்டி அவருடைய கட்சியான ஜார்கண்ட் விகாஸ் பார்ட்டியை கலைத்து விட்டு மீண்டும் பிஜேபிக்குள் ஐக்கியமாகிறார்.

சரி இதனால் என்ன நடந்து விடப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம் ஏற்கனவே ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் தலையீடு ஓவராக உள்ளது என்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் புலம்பி வருகிறார்கள். 29 எம்எல்ஏக்களை வைத்து உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு முதல்வரையும் சேர்த்து 6 அமைச்சர்கள்.

ஆனால் 16 எம்எல்ஏ க்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் 5 அமைச்சர் பதவிகளை பெற்று மொத்த அரசையே ஆட்டி வருகிறது.
இதனால் முதல்வர் ஹேமந்த் சோரணும்
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களும் காங்கிரஸ் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஜார்கண்ட் டில் மீண்டும் பிஜேபி யின் ஆட்சியை கொண்டு வரும் பொறுப்பை பாபுலால் மராண்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது பாபுலால் மராண்டியே ஜார்கண்ட் மாநில பிஜேபி சட்டமன்ற தலைவராக வர இருக்கிறார்.

ஏற்கனவே தன்னுடைய கட்சியில் இருந்து 2 எம்எல்ஏ க்களை காங்கிரஸ் இழுத்து விட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் பாபுலால் மராண்டி இந்த ஆட்சியை கவிழ்ப்பதே தன்னுடைய
முதல் வேலை என்று கூறி இருக்கிறார்.
ஜஸ்ட் 10 எம்எல்ஏ க்கள் பிஜேபி பக்கமாக வந்து விட்டாலே ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பிஜேபி ஆட்சி வந்து விடமுடியும் என்கிற நிலையில் பாபுலால் மராண்டியை மீண்டும் பிஜேபிக்கு
கொண்டு வந்து அடுத்த அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது பிஜேபி.

இதன் மூலமாக ஆட்சி மாற்றத்திற்கான லிஸ்டில் மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம் சிக்கிம் வரிசையில் ஜார்கண்ட்டையும் இணைத்து இருக்கிறார் அமித்ஷா அடுத்து என்ன நடக்கும் என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் !

திரு -விஜயகுமார்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*