Connect with us

#24 Exclusive

பாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா சென்னை வருகை தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் அறிவிப்பு !

வரும் சனிக்கிழமை பாஜகவின் செயல் தலைவர் J P நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அவர் தலைவராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வருகிறார்.சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின் காணொளி மூலம் மற்ற மாவட்டங்களில் அடிக்கல் நட்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

தற்போது தமிழக பாஜகவில் தலைவர் யாரும் இல்லை. இந்நிலையில் பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டங்கள் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் முதல் மண்டல் நிர்வாகிகள் வரை நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வேலைகளில் பாஜகவை அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்னன் இல கணேசன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இதற்கு மாநில துணை தலைவர் MN.ராஜா பொறுப்பு வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

J P நட்டா அவர்கள் வருகையை சிறப்பாகவும் மிகப்பெரிய வரவேற்பும் அளிக்க தமிழக பாஜக முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளது.இதற்கு தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Loading...

J P நட்டா வருவதே மாநில தலைவரை அறிவிக்கத்தான் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யார் தலைவர் என்று யூகிக்க முடியாத நிலையில் தமிழக பாஜகவினர் குழப்பதில் உள்ளனர். இந்நிலையில் J P நட்டா தலைவரை அறிவிப்பார் என்ற தகவல் கசியவே கமலாலயத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

தலைவர் பதவி ரேஸில்பொது செயலாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர். முக்குலத்தோரை நியமிக்க வேண்டும் என டெல்லி வட்டாரங்கள் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் கசிந்து உள்ளது. ஆனால் மோடியின் விருப்பம் மக்களிடையே பிரபலமானவர் தான் வரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.பிரதமர் மோடியின் திட்டங்களை யார் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் என்ற புள்ளி விவரங்களையும் டெல்லி தலைமை வங்கியுள்ளதாக தெரிகிறது. தமிழக பெண்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற சர்வேயும் நடந்துள்ளது. பாஜகவினர் மட்டும் அல்ல பொதுமக்களிடமும் இந்த சைலன்ட் சர்வே நடைபெற்றுள்ளது.

J P நட்டா வருகை புதிய தலைவரை அறிவிப்பார் என்ற தகவலால் பா.ஜ.கவினர் மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளும் உற்றுநோக்கியுள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending