Connect with us

#24 Exclusive

’பிகில்’ லாபகரமான படம்ன்னு யார் சொன்னது? பிரபல தயாரிப்பாளர் ஆவேசம்

Published

on

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் பத்தே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்ததாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் 300 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இது குறித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் தனியார் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் கூறிய போது ’பிகில்’ படம் லாபகரமான படம் என்று யார் சொன்னது? அந்த படம் பத்திரிகையாளர்களால் அதிகப்படியான வசூல் செய்ததாக பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன

தமிழகத்தில் ரூ.100 கோடி, ரூ.200 கோடி அளவுக்கு தியேட்டரில் வசூல் செய்யும் நிலைமை உண்மையில் இல்லை. ’பிகில்’ திரைப்படத்தின் உண்மையான வசூலை கண்டு அதன் தயாரிப்பாளர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்

பிகில் படத்தின் இயக்குனர் அந்த படத்துக்கு மிக அதிகப்படியாக செலவு செய்ததால் தான் இந்த நஷ்டத்தை தயாரிப்பாளர் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் ஒரு நல்ல நடிகர், அவருக்கு மிக அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள். மேலும் விஜய் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருக தந்து படக்குழுவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார். அவருக்கென ஒரு மாஸ் இருக்கின்றது. இருப்பினும் படத்தின் பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே விஜய் உள்பட எந்த பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும் என்று பிகில் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்

ஒரு திரைப்படம் உண்மையில் எவ்வளவு வசூல் ஆனது என்பதற்கான அதிகாரபூர்வமான தகவல் மற்றும் ஆதாரங்கள் இல்லாத நிலையில் ஒரு சில பத்திரிகையாளர்கள் படத்தின் வசூலை பொய்யாக அதிகப்படியாக தெரிவித்து வருவது சினிமா உலகிற்கே பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share