Connect with us

#24 Exclusive

BIGBREAKING சென்னை லயோலா கல்லூரி மூடப்படுகிறதா? நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு !

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது லயோலா கல்லூரி புகழ் பெற்ற இந்த கல்லூரியில் முன்னணி பிரபலங்கள் பலரும் படித்துள்ளனர், ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த லயோலா தற்போது நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து மதம் நம்பிக்கையை விமர்சனம் செய்யும் நிகழ்வுகளை அரங்கேற்றி வருவதாகவும் கல்லூரி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் கடந்த 4.5 ஆண்டுகளாக அரசிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது, அதில் அரசிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செலுத்த தவறினால்

 

Loading...

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919 வரிவிதிப்பு விதி எண். 21 படி சொத்துவரி நிலுவையினை வசூலிக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சொத்து வரிகட்டாத லயோலா கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா கல்லூரிக்கு சீல்வைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Loading...

அதே பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாண ராமன் லயோலா கல்லூரி அமைந்துள்ள இடம் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-லயோலா கல்லூரி 96 லட்சம் சொத்துவரி வைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருப்பது சந்தேகத்தது உண்டாக்குகிறது.

லயோலா நிர்வாகத்திற்கு சொத்தே இல்லை என்பதும், அவர்கள் கைவசம் உள்ள சொத்து நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பதையும் எடப்பாடி அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
லயோலாவிற்கு வழங்கப்பட்ட குத்தகைக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், லயோலா நிர்வாகத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

அங்கு ஒரு இந்து அறநிலையத்துறை சார்பான இந்து தர்மத்திற்கான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும்
தொடர்ந்து தேசவிரோத கும்பல்களை வார்க்கும் கூடமாக விளங்கும் லயோலாவை இல்லாமல் செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். லயோலா கல்லூரி அமைந்துள்ள இடம் உண்மையில் யாருக்கு சொந்தமானது என கேள்வி எழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending