சிமானை பாரதிராஜா வாழ்த்துகிறாரா? தூற்றுகிறாரா? நெட்டிசன்கள் கிண்டல்!

Loading...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்களும் திரையுலக நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து கூறியது வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சீமானுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து டுவிட்டில் கூறியதாவது: உனக்கான காலம் வெகுதூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும். தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்’ என்று கூறியுள்ளார்

Loading...

பாரதிராஜாவின் இந்த டுவீட்டை குறிப்பிட்ட ஒருசில நெட்டிசன்கள் உண்மையில் பாரதிராஜா சீமானை வாழ்த்துகிறாரா? அல்லது தூற்றுகிறாரா? என்ற சந்தேகத்தை கிண்டலுடன் எழுப்பி வருகின்றனர். முடிவு என்னவா இருக்கப் போகுது? எல்லாம் உஷாராகி அக்கவுண்ட்ல காசு போடுறத நிறுத்திடுவாங்க? அண்ணனும் வேற வழியில்லாம கட்சிய கலச்சிடுவாரு, அததான் தமிழகத்திற்கு சாதகமா அமையும்னு சொல்றீங்களா? என்று டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர், ‘அப்படி எல்லாம் நடக்காது.. சொத்து மதிப்பு மற்றும் பொய்கள் கலந்த நகைச்சுவை தான் அ‌திக‌ரி‌க்கு‌ம்.. தமிழ் மக்கள் விழித்து விட்டார்கள். விரைவில் தம்பிகளும் விழித்துக் கொள்வார்கள் என்று கமெண்ட் அளித்துள்ளார்.. இருப்ப்பினும் ஒருசில கமெண்டுக்கள் பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*