தலைவர்களின் கண்குளிர்ச்சியாக ஆசிரியர்கள் ஆடை அணிந்து வர வேண்டும்….சர்ச்சையை கிளப்பிய பல்கலைக்கழக பதிவாளர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர் கோபிநாத் பெண்கள் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் தனிச் செயலாளர் வர உள்ளதால், அந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் பேராசிரியர்கள், அந்த துறையின் தலைவர்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அழகிய ஆடை அணிந்து வருமாறு அந்த பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் பொதுவான ஆடைக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் சூழ்நிலையில் , உயர் அதிகாரிகளின் வருகைக்காக ஆடை அணியும் முறை குறித்து ஒரு தகவல் அறிக்கை அனுப்பப்பட்டது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது , “பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் தனிச் செயலாளர் கலந்துரையாடுவது என்பது பொதுவாக வழக்கத்தில் இல்லாத நிகழ்வு. அந்தந்த துரையின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு ஆளுநரின் தனிச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து இந்த கலந்துரையாடல் சர்ச்சை காரணமாக இந்த கலந்துரையாடல் ரத்தாகியுள்ளது. அதனால் , திருச்சி பாரதிதாசன் ஆய்வுக்கூட்டத்துக்கு நான் வரவில்லை என ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.மேலும் பதிவாளர் கோபிநாத் கூறுகையில் , நான் திட்டத்தை உறுதி செய்வதற்குள் பல்கலைக்கழகம் அந்த அறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்தவிருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*