10 ஆண்டுகளுக்குப் பின் பாக்யராஜ் இயக்கும் படம்! எந்த படத்தின் ரீமேக் தெரியுமா?

10 ஆண்டுகளுக்குப் பின் பாக்யராஜ் இயக்கும் படம்! எந்த படத்தின் ரீமேக் தெரியுமா?

Loading...

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவராக கருதப்படும் பாக்யராஜ் மீண்டும் தன்னுடைய முந்தானை முடிச்சு படத்தினை ரீமேக் செய்ய உள்ளார்.

பாக்யராஜ் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றான முந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்டது. ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜுடன் ஊர்வசி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அதுவும் பாக்யராஜின் இயக்கத்திலேயே.

Loading...

இந்த படத்தில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர்  ஜே.எஸ்.பி சதீஷ் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த தேர்வு குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*