Connect with us

#24 Exclusive

CAA விற்கு எதிராக மாணவர்கள் இடையே விசம் ! தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை தேச துரோகம் வழக்கில் கைது !

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்தியர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை எந்த ஒரு இந்திய குடிமகனின் குடியுரிமையும் கேள்விக்குள்ளாக்கப்படாது எனவும் திட்டமிட்டு சில அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் இடையே பொய் பிரச்சாரத்தை தூண்டி வருவதாகவும் அதனை நம்பவேண்டாம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காக சில இயக்கங்களும், சிலர் இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்தி அதன் மூலம் பலரின் உயிர்களை காவு வாங்கவேண்டும் எனவும் திட்டமிட்டு பணத்தினை பெற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, சில இடங்களில் அது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறின.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வளரும் பிஞ்சு மாணவர்கள் இடையே போலி தகவலை தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடகம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை தூண்டியதாக கர்நாடகா மாநிலம் பீதரில் உள்ள சாஹீன் முஸ்லிம் பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Loading...

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் நீலேஷ் ரக்சாலா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரினை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர், முழுக்க முழுக்க பொய் தகவலை கூறி பள்ளியில் பயிலும் மாணவர்களை போராட தூண்டியது தெளிவாகியது, பின்னர் தேசவிரோதமாக விஷத்தை கக்கி நாடகம் போட்ட பள்ளி தலைமை ஆசிரியையும்,  உருது ஆசிரியையுமான பரிதா பேகம் மற்றும் நபுன்னிகா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Loading...

தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளி ஒன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவிகளை தெருவிற்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தியது அவர்கள் மீதும் இதே வழக்கினை முன் உதாரணமாக கொண்டு தேச துரோகம் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை சிறையில் அடைக்கவேண்டும் என்று வலியுறுத்தபட்டு வருகிறது.

கர்நாடக காவல்துறை போன்று தமிழகத்திலும் நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறை.

©TNNEWS24

Loading...

Trending