கவனித்தீர்களா ! திட்டமிட்ட நாடகம், ஒருவர் கூட செல்லவில்லை ஏன் பானுகோம்ஸ் கேள்வி !

கவனித்தீர்களா ! திட்டமிட்ட நாடகம்,  ஒருவர் கூட செல்லவில்லை ஏன்  பானுகோம்ஸ் கேள்வி !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அமுல்யா என்ற பெண் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினார், இதனையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார், அதில் வேண்டுமென்றே பிரபலம் அடைவதற்காக இதுபோன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவதாகவும் அந்த துக்கடா கும்பலுக்கு அரசியலில் வாய்ப்புகளும் வழங்க படுவதால் உண்டான வினை தான் இது எனவும் குறிப்பிட்டுள்ளார், எல்லைகளை கடந்த மனிதநேயத்தை பேசும் லிபரல்கள் சீனா செல்லவில்லையே ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கருத்து பின்வருமாறு :- பாகிஸ்தான் வாழ்க என்று முழங்குவது ..கவன ஈர்ப்புக்கும், பிரபலமாவதற்கும், அரசியல் வாய்ப்புக்கும் உதவும் என்கிற சிலபல புரட்சிகர மாணவர்களின் / அமைப்புகளின் நினைப்பு …
JNU-ன் ‘துக்டே துக்டே’ கும்பல் ஏற்படுத்திய விளைவு. இந்த கும்பலை சேர்ந்த சிலருக்கு தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பும் கொடுத்தன சில கட்சிகள் என்பது கவனிக்க தக்கது.

Loading...

இப் பெண்ணிற்கும் அதே வழக்கமான சுற்றுசூழல் , புரட்சி பேச்சுகள் , போராட்டங்கள் கொண்ட பின்னணி.
”எல்லைகள் வகுப்பட்டவை தான் நாடுகள் என்று நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள். நாங்கள் மனிதர்களே முக்கியம்..எல்லைகள் அல்ல என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்” என்றெல்லாம் பேச்சுகள் வேறு !

Loading...

‘மனிதர்களே முக்கியம். எல்லைகள் அல்ல’ என்று முழங்கி கொண்டே பாகிஸ்தான் சென்றால்.. இம்ரான் படைகள் அடித்து விரட்டும் என்கிற எதார்த்தம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
”மனிதர்களே முக்கியம். எல்லைகள் அல்ல” என்று முழங்கி கொண்டே… சீனாவிற்கு சென்று ..கொரோனா பாதித்த மக்களுக்கு சேவை செய்யும் ஒரு புரட்சியாளரை கூட இந்த ஆகப்பெரும் லிபரல் கும்பலில் இது வரை காணவில்லை. இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *