சாகா வரம் தரும் நெல்லிக்கனியில் இவ்வளவு மருத்துவ குணமா?

சாகா வரம் தரும் நெல்லிக்கனியில் இவ்வளவு மருத்துவ குணமா?

Loading...

மருத்துவ குணங்களில் மிக முக்கியமான காய் என்றால் நெல்லிக்காய் ஆகும். இவை யுபோர்பியேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். நெல்லியில் பலவகை உள்ளன. அவை கருநெல்லி, அருநெல்லி ஆகும். இதில் குறிப்பாக அரி நெல்லி நமது வீட்டுத் தோட்டத்தில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். இவை பெரும்பாலும் தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இந்த நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ‘சி’ ஆனது எந்தப் பழங்களிலும்

இல்லாத அளவுக்கு அதிக அளவு புரதம்,கலோரிகள் கல்சியம் ,இரும்பு,வைட்டமின் ´பி1,பொஸ்பரஸ், ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதிக சத்து நிறைந்த நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வர தீராத நோய்களும் தீரும். இவை மனிதனுக்கு பல வகையில் நன்மைகள் தர வல்லது. அவை முடி பிரச்சனைகள் மற்றும் சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஞாபக சக்தி அதிகரிக்கவும் மற்றும் இரத்த சோகை நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. மற்றும் இந்த டிப்ஸை ஒரு முறை பார்த்தால் போதும்!! இனி நீங்கள் தான் சமையல் கிங்!

Loading...

மருத்துவ ஆய்வில் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடும். மற்றும் கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். மற்றும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டு வர அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவது குறையும். அதுமட்டும் இல்லாமல் சரும

பிரச்சனைகளான முகப்பரு, பிம்பிள் போன்றவை வருவதை தடுக்கும், என்றும் இளமை தோற்றத்தில் வைக்க இந்த நெல்லிக்கனி உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் அல்லது சாற்றைக் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும் மற்றும் குடலியக்கத்தை சீராக்கவும், முடிகொட்டுதல், கல்லீரல் பிரச்சனை போன்றவை குணமாகும் தன்மை கொண்டவை ஆகும். மற்றும் மருத்துவ குணங்கள் நெல்லியில் இருப்பதாக, சித்த மருத்துவர்களாலும், இயற்கை அறிஞர்களாலும் நம்பப்படுகின்றன என குறிப்பிடத்தக்கது. இனி பினராயி விஜயன் UAE சென்றால் என்ன தண்டனை ? UAE தூதரகம் வெளியிட்ட தகவலால் காற்றில் பறந்த மானம் !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*