50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் !

50 கோடி வழங்கிய பிசிசிஐ… விமர்சிக்கும் நெட்டிசன்கள் – இதுதான் காரணம் !

Loading...

இந்தியாவில் கொரோனா நிவாரணத்துக்காக பிசிசிஐ 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதை ரசிகர்கள் பலரும் கேலி எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

Loading...

கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 979 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்குக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் நிவரணத்துக்காக நிதியுதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய தொழிலதிபரான டாட்டா நிறுவனம் 1500 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மேலும் பிசிசிஐ சார்பாக 50 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தில் பல சலுகைகளை வாங்கிக் கொண்டு உலகின் நம்பர் 1 பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருக்கும் பிசிசிஐ வெறும் 50 கோடி ரூபாய் கொடுத்திருப்பதை கேலி செய்யும் விதமாக #SHAMEBCCI  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*