Connect with us

முகப்பு

இதுதான் உலகின் மிகப்பெரிய மைதானம் … பாத்துக்கோங்க – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் !

இதுதான் உலகின் மிகப்பெரிய மைதானம் … பாத்துக்கோங்க – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் !

குஜராத்தில் கட்டப்பட்டு வரும் மிகப்பரிய மைதானத்தின் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் எப்போதுமே சொர்க்கபுரிதான். இதுவரை உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற சாதனை நிகழ்த்தி வந்த அதன் சாதனையை கூடிய விரைவில் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் மைதானம் ஒன்று தட்டிச் செல்ல இருக்கிறது.

Loading...

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 700 கோடி ரூபாய் செலவில்  63 ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது பிரம்மாண்டமான மைதானம். இதில்  1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.  இந்த மைதானத்தில் மார்ச் மாதம் நடக்க இருந்த ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கான போட்டியை நடத்த பிசிசிஐ தலைவர் விரும்பினார்.

Loading...

ஆனால் கட்டுமானப் பணிகள் முடியாததால் பங்களாதேஷுக்கு அந்த இரண்டு போட்டிகளும் மாற்றப்பட்டன. இதனால் சோகமான ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக  அந்த மைதானத்தின் முழுவடிவப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. கையில் அணியும் மோதிரத்தைப் போல தோற்றமளிப்பதால் இதை மோதிர மைதானம் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending