சவால் விட்டு இப்படி ஆகிப்போச்சே ! கிண்டல் செய்யும் பானு கோம்ஸ் !!

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதில் அரசுகள் ஈடுபட்டு கொண்டிருக்க வழக்கமான அரசியலும் அனைத்து மாநிலங்களிலும் அரங்கேறி வருகிறது, இதில் பொதுவாக இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்சனை புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையை வைத்து அடுத்து வரக்கூடிய தேர்தலை சந்திப்பது என்பதுதான்.

Loading...

தமிழகத்தில் வழக்கமாக வட நாட்டு நபர்கள் தமிழர்கள் வேலையை பறித்து கொண்டார்கள், பானி பூரி பாய்ஸ், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் வட இந்தியர்கள் புகுந்து விடுவார்கள் என இதுவரை வடமாநிலத்தவர்களை விமர்சனம் செய்து வந்த அனைத்து கட்சிகளும் தற்போது திடீர் என புலம்பெயர் தொழிலாளர்கள் என வட இந்தியர்கள் மீது அக்கறை இருப்பதாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

இதில் உத்திர பிரதேசத்தில் மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்து வருவது குறித்து சவால் விட்டு பல்வேறு குளறுபடிகள் சிக்கியுள்ளார் ப்ரியங்கா காந்தி, உத்திர பிரதேசம் மாநிலம் நிலவரம் குறித்து பானு கோம்ஸ் கிண்டல் செய்து வெளியிட்ட பதிவு பின்வருமாறு :-

Loading...

1000 பஸ்களில் ஆரம்பித்த எதிர் அரசியல் சவால் …500 என்கிற பதில் சவாலை எதிர் கொண்டு ..50 என்று குறுகி…அதுவும் இருசக்கர வாகனமாக சுருங்கி விட்ட வேடிக்கை !பிற மாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல 1000 பஸ்களை அளிப்பதாக காங்கிரசின் பிரியங்கா கூற.. அசராத உ.பி முதல்வர் யோகி ..பதிலுக்கு ..முதல் தவணையாக 500 பஸ்களை ..அவற்றின் எண்கள் + ஓட்டுநர் விபரங்களோடு அனுப்புமாறு கூற ….

அதிலும் முதல் தவணையாக 50 பஸ்களுக்கான விபரங்களை பிரியங்கா அளிக்க..அதில் பலவும், ஆட்டோ, சரக்கு வாகனம் மற்றும் ஸ்கூட்டர்க்கான எண்கள் என்று உ.பி. அரசு கூறி இருக்கிறது. இதை ஒட்டிய இன்னொரு வேடிக்கை… சென்ற வருட கும்ப மேளாவிற்கு உ.பி முதல்வர் யோகி ஏற்பாடு செய்து ..கின்னஸ் வரை புகழ் பெற்ற 500 பேருந்துகளின் புகைப்படத்தை … பிரியங்காவின் ‘1000 பஸ்களை பாரீர்’ என்று அக் கட்சியினர் விளம்பரம் செய்ததுதான். 🙂

இதற்கிடையில்….திரிபுகள் இல்லாது செய்திகளை போடாத பத்திரிக்கைகள் எல்லாம்..fact check என்று செய்தி வெளியிடுவது…இன்னொரு பக்கம் நடக்கும் வேடிக்கை :). இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*