Connect with us

#24 Exclusive

அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு வைக்கும் ஆப்பு சபாஷ் இதைத்தான் எதிர்பார்த்தோம் பானுகோம்ஸ் வாழ்த்து !

சமூகசெயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் இந்தியா வந்துள்ள அமேசான் நிறுவனத்தலைவரை விமர்சனம் செய்தும், மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தும் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :-
இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்திருக்கிறார்….அமேசான் நிறுவன தலைவர் Jeff Bezos.

இவரின் வருகையை எதிர்த்து… நாடு தழுவிய அளவில்..இந்தியாவின் 300 நகரங்களில்…சிறு-குறு சில்லறை வர்த்தக வியாபாரிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். ஆன்லைன் வர்த்தகத்தில்..அமெசான் அளிக்கும் சாத்தியமற்ற தள்ளுபடிகள் + குறிப்பிட்ட வியாபாரிகளிடம் மட்டும் ஏற்படுத்திக் கொள்ளும் வர்த்தக ஒப்பந்தம் போன்றவை..சிறு-குறு சில்லறை வர்த்தக வியாபாரத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து ..டெல்லியின் வியாபாரிகள் மகாசங்கம் அளித்த புகாரில் இருக்கும் அடிப்படை உண்மைகளை கருத்தில் கொண்ட .மத்திய அரசு ..அமேசான் & பிளிப்கார்ட் மீதான விசாரணையை..CCI [ Competitive Commission of India] மூலம் தொடங்கி இருக்கிறது.
இந்த சூழலில் தான்…இந்தியாவிற்கு வந்து 1 பில்லியன் டாலர் முதலீடு என்று பேசிக் கொண்டிருக்கிறார் Jeff Bezos.
இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலும் Jeff Bezos-ஐ சந்திக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

Loading...

இந்தியாவில் இறக்குமதியாகும் பொருட்களில்..குறிப்பாக எந்த வகை என்று குறிப்பிடாமல்..’ Others ‘ என்று குறிப்பிட்டு இறக்குமதியாகும் பொருட்கள் மூலமாக விதிமீறல்கள் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில்.. …ஜெர்மனி நாட்டை பின்பற்றி..’Others’ என்கிற வகையில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு முழுதான தடை விதிக்கவும் பரிசீலித்து வருவதாக அறிவித்திருக்கிறார் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.

Loading...

Good Job !
இந்தியாவிற்கு எதிராகவும்..பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக வெறுப்பை உமிழ்ந்து தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வரும் அமெரிக்க பத்திரிக்கை Washington Post-ம் ..இந்த Jeff Bezos -க்கு சொந்தமானது தான். இவ்வாறு தனது கருதினை பானு கோம்ஸ் பதிவு செய்துள்ளார்.

அமேசான் நிறுவனம் இந்து மதம் கடவுள்கள் அடையாளம் பதித்த கால்மிதிகள், டாய்லெட் ஷீட்களாக விற்பனை செய்து தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Trending