இனி அரசியல் எழுதப்போவதில்லை வெறுப்புடன் வெளியேறிய பானு கோம்ஸ் காரணம் என்ன?

பிரபல சமூக சிந்தனையாளரும் அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் இனி அரசியல் விமர்சனங்கள் கருத்துக்கள் என எதையும் சமூகவலைத்தளங்களில் எழுத போவது இல்லை என கூறிவிட்டார் அத்துடன் அவரது அனைத்து பதிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

Loading...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பானு கோம்ஸ் பெயரில் ஒரு screen shot காபி ஒன்று சுத்தியது, அதனை வைத்து சிலர் வேண்டுமென்றே அவரை தவறாக விமர்சனம் செய்தனர், இதுகுறித்து பானு கோம்ஸ் தான் எந்த தனிப்பட்ட வாட்சாப் குழுவிலும் இல்லை என்றும் அது வெறும் போலித்தனம் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பிறகுதான் அவர் இனி விமர்சனங்கள் எதிலும் ஈடுபட போவதில்லை என கூறியிருக்கிறார் அவர்கூறியதாவது : நேரடி அரசியல் அதிகாரம் இன்றி தனிமனிதர்கள் அரசியலை பேசுவதும்,
விமர்சனம் செய்வதும் வீண்!அது விழலுக்கு இறைத்த நீர்.விவாதங்களற்ற, விமர்சனங்களற்ற அரசியல்தான் இருக்க வேண்டும் என்பதான ஒரு களத்தில்

Loading...

எதற்காக மாய்ந்து மாய்ந்து எழுத
வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த எண்ண ம் மாறும் வரை இனி அரசியல் விமர்சனங்கள் எதுவும் எழுதுவதாக இல்லை, எந்த அரசியலாக இருந்தாலும்…not worthy of
my precious time and effort. என்றுகுறிப்பிட்டுள்ளார்.

ஏன் பானு கோம்ஸ் அவ்வாறு தெரிவித்தார் என்பது அவரே விளக்கம் கொடுத்தால்தான் உண்மையான நிலவரங்கள் வெளிவரத்தொடங்கும் இருப்பினும் அவர் அந்த முடிவை எடுக்க வேறொரு அமைப்பு அவரை மன ரீதியாக அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் பெயரில் போலி தகவலை பகிர்ந்து அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்தால் மட்டுமே ஜனநாயகம் இருக்கும் என்று பேசுபவர்கள் யாரும் தற்போது பானு கோம்ஸ் விவகாரத்தில் வாய் திறக்கவில்லை, மேலும் தனி மனிதர்கள் அரசியல் பேசுபவர்களை குறிவைத்து அவர்கள் பற்றி தவறான தகவலை பரப்புவதும் அவர்களை தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*