Connect with us

#24 Exclusive

40 பெண்களுடன் உல்லாசம் ! ஆபாச வீடியோ மிரட்டல் ! வங்கிக்கு வந்த இளம் பெண்களை குறிவைத்து நாசம் செய்த ஊழியர் சிக்கியது எப்படி தெரியுமா ?

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காஷியராக பணியாற்றி வருபவர் திருச்சியை சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் . இவர் தனது வங்கிக்கு வரும் இளம் பெண்களை குறிவைத்து அவர்களுடன் பேசி பழகி உல்லாசம் அனுபவித்து அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார் .

எட்வின் வீசிய வலையில் இதுவரை 40 பெண்கள் சிக்கியுள்ளனர் . கடந்த சில ஆண்டுகளாக எட்வின் ஜெயக்குமார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவந்த நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன் தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது .

திருமணமான நாள் முதல் தனது மனைவியிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருந்த எட்வின் எப்போதும் 15 செல்போன்களை வைத்துக்கொண்டு தனியறையில் பெண்களுடன் வாட்ஸாப்பில் பேசிக்கொண்டிருந்துள்ளார் . தன் கணவர் 15 செல்போன்கள் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி . எட்வின் தூங்கியபின் அவரது செல்போன்களை எடுத்து ஆராய்ந்துள்ளார்

Loading...

அப்போது அதில் பல பெண்களுடன் அவர் பேசுவதும் அந்த பெண்களுடன் தன் கணவர் இருக்கும் ஆபாச வீடியோவையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் . உடனே இதுபற்றி தன் கணவரிடம் கேற்க அவர் அதற்க்கு சரியாக பதிலளிக்க வில்லை உடனே தனது கணவரின் பெற்றோரிடம் சொல்ல அவர்களோ அந்த பெண்ணை கொலை செய்துவிடுவோம் என்றும் ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர் .

Loading...

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் செல்போனில் இருக்கும் விடீயோக்களை திட்டமிட்டு எடுத்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததுடன் காவல் நிலையத்திலும் புகாரளித்தார் . இதுபற்றி விசாரித்த காவல் துறையினர் எட்வின் கடந்த சில ஆண்டுகளாக இதுபோல தனது வங்கிக்கு வரும் பெண்களின் பாஸ் புக்கில் இருந்து போன் நம்பரை எடுத்து அவர்களுடன் பேசி அவர்களை தன் வலிக்கு கொண்டுவந்ததும் இதற்க்கு அதே வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது . இதனையடுத்து எட்வின்னை கைதுசெய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending