Connect with us

#24 Exclusive

கடுமையாக கோபப்பட்ட பானுகோம்ஸ் இனியாவது திருந்துவார்களா?

சிதம்பரம்.,

தமிழகத்தில் மிகவும் பழமையான தொன்மையான கோவில்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோவில் அங்கு அமைந்துள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் பட்டாசு தொழிலதிபர் வீட்டு திருமண விழாவிற்காக பழமையான கோவிலில் அலங்காரங்கள், வண்ணமின் விளக்குகள் அமைத்து கோவில் இடத்தில் திருமண மண்டபத்தை போன்று மாற்றி திருமண வரவேற்பை செய்திருந்தனர்.

அனைத்து மக்களுக்கும் பொதுவான கோவிலில் எப்படி ஒரு தனியார் விழா நடத்தலாம், அதற்கு அனுமதி அளித்தது யார் போன்ற பல கேள்விகளை ஆன்மீக பெரியோர்கள் எழுப்பி கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர், இந்நிலையில் இதே கருத்தை ஆழமாக வலியுறுத்தி சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Loading...

தீட்சிதர்கள் வசம் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாசி Standard fireworks உரிமையாளர் வீட்டு திருமணத்திற்கு அனுமதி வழங்கப் பட்டு …விமர்சையான அலங்காரங்களுடன் திருமணம் நடந்தேறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Loading...

சம்பந்தப் பட்ட தீட்சிதரை இடைக்கால பணிநீக்கம் செய்ததோடு விஷயம் முடித்துவைக்கப் படுகிறது. அந்த ஒற்றை தீட்சிதர் இக்காரியத்தில் ஈடுபடும்போது..மற்ற தீட்சிதர் படை முழுவதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா என்ன ?!!

பணபலத்திற்கும், அரசியல் அதிகார பலத்திற்கும் கூழை கும்பிடு போட்டே பழகிப் போன கூட்டம்!

ஆம். அத்திவரதர் நிகழ்வின் போது பார்த்த அதே கேடுகெட்ட VIP கலாச்சாரம் தான்!

அடுத்தது பக்தர்கள்.

கோவிலுக்கு அன்றாடம் செல்லும் உள்ளூர் பக்தர்கள் ஏராளம் பேர் உண்டு. திருமண ஏற்பாடுகள் நடப்பதை பார்த்த பிறகாவது …அது குறித்த புகாரினை மக்கள் ஒன்று திரண்டு அளித்தார்களா என்றால் இல்லை !

வேடிக்கை பார்த்து அங்கலாய்த்து விட்டு..அதற்கு மேல் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கடந்து செல்லும் பக்தர்களின் ஒட்டாத மனோநிலை…பெரும் சாபக்கேடு. ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு அற்ற மேலோட்டமான வெற்று பக்தி இத்தகைய மழுங்கடிக்கப் பட்ட இயல்பை ஏற்படுத்திவிடும். வெற்று பக்தியை தாண்டிய ஆழந்த ஆன்மீகத்தை கற்று தரும் இடங்களாக இருக்க வேண்டிய கோவில்கள் அனைத்தும் ..அப் பணியை செய்வதே இல்லை. அதிலும், இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் குறித்து கேட்கவே வேண்டாம்.டாஸ்மாக் போல..மால்கள் திரையரங்குகள் போல வருமானம் ஈட்டித்தரும் வியாபார ஸ்தலமாக இயந்திர கதியில் இயங்குகின்றன!

இம் மண்ணில் எத்தனை தொன்மங்கள் இருந்தென்ன…”இந்து வெறுப்பு எனும் அரசியல்” .. உரிமையுள்ள மண்ணின் மக்களிடம் இருந்து அனைத்து அறிவுசார் பெருமைகளையும் தள்ளி வைத்து ..தங்கள் தொன்மத்தின் மதிப்பு தெரியாத கூட்டமாய் நாசம் செய்து வைத்திருக்கிறது ! அதனாலேயே..ஒரு சமூகமாக இணைந்து இயங்கும் தன்மையை இழந்துவிட்ட மக்கள்.

இத்தனை தாக்குதல்களையும்,வெறுப்புகளையும், மூடத்தனங்களையும் தாண்டி …இன்னமும் உயிரோடிக்கிறது எனில்..தொன்மத்தின் வளமும், அதிலிருந்து இம் மண் பெறுகிற ஆன்மீக பலமும் தான் காரணம்.

இவ்வாறு தனது கருத்தினை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் பானு கோம்ஸ்.

இதற்கு முன்னர் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றபோது அவருக்கு முதல் மரியாதை அளித்து சிறப்பித்த தீட்சிதர்கள் மீது சமூகவலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

Trending