Connect with us

#24 Exclusive

பாகுபலி 2 படத்தின் காபியா மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்? கிண்டலுக்கு உள்ளாவது ஏன்?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்டர் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, சாந்தனு, பேட்டை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் முடிந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இரண்டாவது போஸ்டர் வெளியாகியது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மாஸ்டர் படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக் போஸ்டரும் ஹாலிவுட் படம் மற்றும் தெலுங்குபட போஸ்டர்களின் காப்பி என கூறி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்தனர்.

மேலும் இப்படத்தில் முதல் லுக் மற்றும் இரண்டாவது லுக் ஆகியவற்றில் விஜய்சேதுபதியை காணோம் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பினர், இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, இந்த புகைப்படம் 2017 ஏப்ரல் மாதம் வெளியான பாகுபலி 2 திரைப்படத்தின் பிரத்தியேக புகைப்படத்துடன் 80% சதவிகிதம் மேட்ச் ஆவதாக உள்ளது.

Loading...

பாகுபலி இரண்டில் பிரபாஸ் ராணா இருவரும் கண்ணம் நெற்றியில் ரத்தம் வடிவது போன்று இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துபடி இருப்பர், அதே மாஸ்டர் 3 திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கத்தியபடி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading...

முதல் இரண்டு போஸ்டர்களும் கிண்டலுக்கு உள்ளான நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending