மோசமான வார்த்தையில் திட்டி தீர்த்த தமிமுன் அன்சாரி நாங்களும் இனி அந்த வார்த்தையை பயன்படுத்துவோம் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு !!

இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர், அதற்கு நடிகர் ரஜினிகாந்த தனது கருத்தினை பதிவு செய்தார், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கின் விசாரணைக்கு ஆணையம் அழைத்ததற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆணையத்திடம் பதில் அளிப்பதாகவும் அதனை இங்கு கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

Loading...

மேலும் CAA போராட்டம் குறித்தும் NRC, NPR குறித்தும் கேள்வி எழுப்ப பட்டது, இதற்கு நடிகர் ரஜினிகாந்த NPR என்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு நிச்சயம் நாட்டிற்கு தேவை அதன்படி நம் நாட்டின் மக்கள்தொகையை அறிவதுடன், வெளிநாட்டினர் யார் என்பதை அடையாளம் காண உதவும் என்று தெரிவித்தார். மேலும் Nrc என்பது இன்னும் வரவில்லை அது வரும் சூழலில் அதுகுறித்து தரவுகளை பார்த்த பின்பு கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் மிக முக்கியமாக ஒரு சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக CAA குறித்து தவறான பிரச்சாரங்களை முஸ்லீம் மக்களிடையே விதைத்து போரட்டத்தை தூண்டி விடுவதாகவும், இதற்கு அந்த மதத்தை சேர்ந்த மதம் குருமார்களும் துணை போவதாக அதிரடியாக தெரிவித்தார், இந்த கருத்து குறித்து தமிமுன் அன்சாரியிடம் தனியார் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியது.

Loading...

ரஜினியின் கருத்திற்கு பதில் அளிப்பதற்கு பதில் அவரை தமிமுன் அன்சாரி திட்டி தீர்த்தார் என்றே சொல்லவேண்டும் குறிப்பாக கந்து வட்டி தொழில் செய்பவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்றும், அரசியல் ஆழம் தெரியாதவரின் வீண் பேச்சு எனவும் இதே போன்று பேசினால் ரஜினி மரியாதையை இழக்க வேண்டும் என பேசியிருந்தார், இன்னும் பல விமர்சனங்களை செய்திருந்தார்.

இதற்கு கடுமையாக ரஜினி ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர், அதிமுகவின் தயவில் பிச்சை எடுப்பது போன்று அந்த கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி பழைய நினைவுகளை நினைத்து பார்க்க வேண்டும் என்றும், இப்போது வேறொரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படும் நீங்கள் இனியும் கந்துவட்டி என பேசினால் நீங்கள் எங்கு என்ன தொழில் செய்து எம் எல் ஏ ஆனீர்கள் என சொல்லவேண்டியது வரும் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இனியும் நாவினை அடக்கப்படவில்லை என்றால் நாங்களும் அதே பாணியில் விமர்சனம் செய்வோம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*