Connect with us

Uncategorized

இந்தியாவிடம் மீண்டும் மண்டியிட்டது மலேசியா ! பொருளாதாரம் சரிவதை முன்னிட்டு தானாக முன்வந்து அதிரடி முடிவு ! இஸ்லாமிய அமைப்புகள் அதிர்ச்சி

தற்போதைய 20- 21நூற்றாண்டு நிச்சயம் இந்தியாவிற்கான நூற்றாண்டு என்றே கூறலாம் உங்களிடம் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் மீது மதிப்பிட முடியாத அளவு எதிர்ப்புகள் இருந்தாலும் நிச்சயம் உங்களால் இந்தியன் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளை இந்தியாவின் வசம் கொண்டுவந்துள்ளது.

மலேசியா நாட்டின் பிரதமராக 94 வயதான மகாதீர் பின் முகமத் ஆட்சிக்கு வந்தார், ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் முதல் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார், குறிப்பாக இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் அதிகம் மலேஷியா நாட்டில் வேலை செய்வதால், நாம் வைத்ததுதான் சட்டம் என்றும் இந்தியர்கள் நமது நாடு விதிக்கும் கொள்கைகளை ஏற்று கொள்வார்கள் என்று தப்பு கணக்கு போட்டார்.

அதன் பயனாக இந்தியாவின் 100% உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தார், மத்திய அரசின் அணுகுமுறையால், அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளே இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுக்காத நிலையில் மலேஷியா குரல் எழுப்பியதை இந்தியா 100% விருப்பவில்லை.

Loading...

அதன் எதிரொலியாக மலேஷியா நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை 50 % அளவிற்கு குறைத்தது என பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில் 60% அளவிற்கு குறைந்ததாக தெரிந்தது, இதற்கு காஷ்மீர் விவகாரத்தில் மலேஷியா தலையிட்டது மட்டும் காரணமல்ல இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பி சென்ற சாகிர் நாயிக் என்பவனுக்கு அடைக்கலம் கொடுத்தது.

Loading...

இந்தியாவிற்கு எதிராக நிற்கவேண்டாம் என துபாய், சவூதி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் மறுத்த நிலையில் மலேசியா ஆதரவு கொடுத்தது இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை சந்தித்தது, அதனையடுத்து இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார தடையால் மலேஷியா பொருளாதாரம் வீழ தொடங்கியது, இந்நிலையில் சாகிர் நாயிக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கவும், இந்தியாவில் இருந்து சக்கரை இறக்குமதியை அதிகரிக்கவும் முடிவு செய்த மலேசியா முதலில் சக்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் ஆசியாவின் முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்தது மட்டுமல்ல மலேசியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என மலேஷியா அரசிற்கு வெளியுறவுத்துறை மூலம் அறிவுறுத்தியுள்ளது, இதனால் இந்தியாவை பகைத்த மலேஷியா மண்டியிட்டதுடன் தற்போது இந்தியாவில் இருந்து சர்க்கரை இறக்குமதியை அதிகரித்ததுடன், குற்றவாளி சாகிர் நாயிக் என்பவனையும் ஒப்படைக்க முடிவெடுத்து இருப்பது உண்மையில் நம் மத்திய அரசு நடவடிக்கை மூலம் இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்.

வாசுகி கிருஷ்ணா

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending