Connect with us

#24 Exclusive

தீர்ப்பு வெளியானது அயோத்தி தீர்ப்பு ! இடம் இந்துக்களுக்கே சொந்தம்

Published

on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு சரியாக அயோத்தி தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது., இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

இந்நிலையில் தற்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது., அதன் படி

Loading...

5 நீதிபதிகளும் ஒரே மனதாக தீர்ப்பினை வாசித்தனர், முதலில் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத ஷியா முஸ்லீம் பிரிவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர், மேலும் இறைநம்பிக்கைக்குள் நீதிமன்றம் செல்வது தேவையற்றது, சட்டத்தின் அடிப்படையிலேயே அணுகியிருக்கிறோம் என்றும் தலைமை நீதிபதி கூறினார், மேலும் மற்றொரு இந்து அமைப்பான நிகோரி அஃஹாராவின் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

Loading...

காலி மனையில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும் ராமர் கோவிலை இடித்த பின்பே அங்கு கட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை தொல்லியல்துறை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அயோத்தியில் பாபரின் மசூதியை அவரது தளபதி இடித்துவிட்டு கட்டியதற்கான தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது எனவும் தீர்ப்பில் கூறினர்.

மேலும் பாபர் மசூதிக்கு முன்பு அங்கு இருந்தது இஸ்லாமிய கட்டடம் இல்லை என்றும் கூறிய தலைமை நீதிபதி. அயோத்தி நிலம் ராம் லீலா அமைப்பிற்கே சொந்தமானது என்றும் கூறியுள்ளனர்.மேலும் முழுமையான தீர்ப்பினை வாசித்தனர்.., அலகாபாத் தீர்ப்பு தவறு என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது, இதன்மூலம் அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கு செல்கிறது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending