தன்னை மதமாற்ற முயன்ற கும்பலுக்கு ஆப்பு வைத்த அதிரா !! மிக பெரிய நெட்ஒர்க் பிடிபட்டது !

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆதிரா மிக பெரிய அளவில் இடதுசாரிய ஊடகங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில ஊடகங்களால் புதுமை பெண்ணாக புகழப்பட்டார் அதற்கு முக்கிய காரணம் அவர் தனது இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார்.

Loading...

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் அதிரா. இவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களுடன் பேசியபோது, படுதா அணிந்து இருந்தார். தனது சொந்த விருப்பத்தின் பேரில் இஸ்லாத்திற்கு மாறியதாகவும், இங்கு ஒரே கடவுள்தான் என்றும், ஒரே நம்பிக்கை தான் என்றும் இது தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். தனது பெயரையும் ஆயிஷா என மாற்றி கொண்டதாக தெரிவித்தார்.

அதனையடுத்து அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கில் தன்னை தனது பெற்றோர் மதம் மாற்ற முயலாமல் இஸ்லாம் மதத்திலேயே இருக்க அனுமதித்தால் செல்வதாக கூறினார் இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் வீட்டிற்குள் அழைத்து சென்றனர், அதன் பிறகுதான் மிக பெரிய சதித்திட்டம் வெளியாகியுள்ளது.

Loading...

இந்து பெண்களை பள்ளியில் இருந்தே தோழிகள் உடன் பழக செய்து மதமாற்றவும், அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கு ஒரு குழு, மேலும் ஆண் நண்பர்களை உண்டாக்க என ஒரு குழு எனவும் செயல்பட்டுள்ளனர், இது ஆதிரா வாழ்விலும் அரங்கேறியுள்ளது, இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் முழு தகவலையும் ஆதிரா தெரிவித்துள்ளார் அதில்.

தனது முஸ்லிம் நண்பர்கள் இஸ்லாத்தை நம்புவதற்காக தன்னை தவறாக வழிநடத்தியதாக கூறினார். “ஒரு கல், ஒரு விக்கிரகத்தை வணங்குவது முட்டாள்தனம் என்றும், இந்து மதத்திற்கு பல தெய்வங்கள் உள்ளன என்றும், இஸ்லாத்திற்கு ஒரே ஒரு உயர்ந்த கடவுள் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் இந்த சந்தேகத்தை எனக்குள் திணித்தார்கள் . அவர்கள் அதைச் சொன்னபோது, நான் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக உணர்ந்தேன், அப்போது நான் யோசித்தபோது , அவர்கள் சொன்னது சரி என்று உணர்ந்தேன், “என்று அவர் கூறினார்.

மேலும் இஸ்லாத்தை நம்புகிறவர்கள் மட்டுமே சொர்க்கத்தை அடைவார்கள் எனவும், மற்றவர்கள் காபிர்கள் கீழ் சாதியினர் எனவும் குறிப்பிட்டு தன் மனதில் நஞ்சை விதைத்தனர் மேலும் எனது பெற்றோரை மதம் மாற்றவும் தூண்டினர், மேலும் பாப்புலர் பிராண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் முதல் பலரது முகவரிகள் தொடர்பு கொண்ட விதம் குறித்து அனைத்தையும் கூறியிருந்தார்.

இதன் மூலம் எத்தனை பெண்களை மதம் மாற்றினார்கள், மேலும் பணம் எவ்வாறு பயன்படுத்த படுகிறது, என்ற வீடியோ ஆதரத்தையும் ஆதிரா பெற்றோர் மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர், இதன் பின்னணியில் சாஹிர் நாயிக் குழு செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது எனவே ஆதிரா மதமாற்ற முயன்றவர்களை தற்போது மொத்தமாக சிக்க வைத்துள்ளார், தற்போது மதமாற்றத்தில் சிக்கும் பெண்களுக்கு உதவ போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு பெண் நினைத்தால் யோசித்தால் எதையும் சாதிப்பார் என்பது தற்போது கேரளா மாநிலத்தில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது, ஆதிரா ஒரு சாதனை பெண்தானே !

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*